திருச்செந்தூர் கோவிலில் கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சம் முறைகேடு – நடந்தது என்ன?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.100 கட்டண ரசீது வழங்கியதில் முறைக்கேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. விசாரணையின் போது ரூ. 25 லட்சம் அளவுக்கு முறைக்கேடு நடந்திருப்பது தெரியவந்தது. இந்த தகவல் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர், மே 22 : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம், முதியோருக்கான வரிசை ன 3 வகையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் ரூ.100 கட்டண ரசீது வழங்கியதில் முறைக்கேடு நடந்திருப்பதாக ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சம் முறைகேடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.100 கட்டண ரசீது வழங்கியதில் முறைக்கேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் விசாரணையின் போது ரூ. 25 லட்சம் அளவுக்கு முறைக்கேடு நடந்திருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் இதில் தொடர்புடையதாக கூறப்படும் கோவில் ஊழியர் மேனகா என்பவரை கோவில் இணை ஆணையர் ராமு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : கோட்டையை ஆளும் தவெக கூட்டணி அரசு.. “அமைச்சர்கள் மற்றும் இலாகாக்கள்” முழு விவரம்!




இந்த விவகாரம் தொடர்பாக திருச்செந்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் கோவில் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி என்பவர் புகார் அளித்தார். இது தொடர்பாக அவர் அளித்த மனுவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.100 கட்டண சீட்டு விற்பனை நிலையங்களை ஆய்வு செய்த போது கம்ப்யூட்டரில் ஐடிஎம்எஸ் பயனர் ஒருமுற மட்டும் கட்டண சீட்டு நகல் எடுக்கும் சவதி ஆகியவற்றை பயன்படுத்தி முறைக்கேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கோவில் பணியாளர் மேனகா பணியில் இருந்த நேரத்தில் மோசடி நடந்திருப்பது உறுதியாகியுள்ளது. அவர் இதுவரை ரூ. 25,24,100 பணத்தை முறைகேடு செய்துள்ளார். இதன் காரணமாக மேனகா தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்யாமல் இருந்த கோவில் பணியாளர்கள் பாலமுருகன் மற்றும் உச்சிமாகாளி ஆகியோரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அமைச்சரான வன்னி அரசு, ஷாஜகான்.. வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்.. திமுகவினருக்கு வைத்த முக்கிய வேண்டுகோள்!!
மேலும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள மேனகா தான் செய்த தவறை ஒப்புக்கொண்டதோடு ரூ.5 லட்சத்தை தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். மீத தொகையையும் திருப்பி அளிப்பதாக உறுதியளித்துள்ளார். கோவிலுக்கு இழப்பு ஏற்படுத்திய அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பலரும் கட்டண தரிசனத்தை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அதில் முறைக்கேடு நடந்திருப்பதாக வெளியான தகவல் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.