AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதி கைது!

Sri Lankan Couple Arrested For Casting Vote | தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலில் சட்ட விரோதமாக வாக்களித்ததாக இலங்கையை சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். விமான நிலையத்தில் சோதனையின் போது அவர்கள் இந்திய வாக்களர் அடையாள அட்டை வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதி கைது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Jul 2026 07:13 AM IST

சென்னை, ஜூலை 13 : தமிழகத்தில் (Tamil Nadu) கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற தேர்தல் (Assembly Election) நடைபெற்றது. இந்த தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக கூறி இலங்கை தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிலர் தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்ததாக குற்றச்சாட்டுகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் இலங்கை தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதி

இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர் குணேஸ்வரன். 69 வயதாகும் இவர் சென்னை தியாகராய நகரில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். அங்கு சிறிய அளவில் நகைக்கடை ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். இலங்கை பாஸ்போர் உடன் தமிழகத்தில் வசித்து வரும் இவர், இந்திய குடிமக்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!

விமான நிலையத்தில் சிக்கிய இலங்கை தம்பதி

இந்த தம்பதி வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர். இது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சென்னை மாமல்லபுரம் காவல்நிலையத்தில் இவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் தம்பதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 2026 போல 2031ல் மாபெரும் ஆட்சி மாற்றம் – ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை உறுதி

காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் அந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 11, 2026 அன்று அவர்கள் இருவரும் இலங்கை செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இந்திய வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us