AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உலகில் வெப்பத்தால் கடுமையாக பாதிக்கும் நகரங்கள் – மதுரைக்கு 7வது இடம் – அதிர்ச்சி தகவல்

உலக வெப்பமடைவதால் அதிகம் பாதிக்கப்படும் 10 நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பட்டியலில் இந்தியாவின் அகமதாபாத், நாக்பூர் மற்றும் மதுரை ஆகிய 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகில் வெப்பத்தால் கடுமையாக பாதிக்கும் நகரங்கள் – மதுரைக்கு 7வது இடம் – அதிர்ச்சி தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Jul 2026 21:48 PM IST

உலக வெப்பமடைவதால் அதிகம் பாதிக்கப்படும் 10 நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பட்டியலில் இந்தியாவின் அகமதாபாத், நாக்பூர் மற்றும் மதுரை ஆகிய 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளயாகியுள்ளது. உலக அளவில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 205 நகரங்கள் இந்த ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்ன.

மதுரைக்கு 7 வது இடம்

உலக வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் பட்டியலை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதில்,

1. ஈராக் நாட்டில் உள்ள அல் பஸ்ரா
2. இந்தியாவில் உள்ள அகமதாபாத்
3.மாலி நாட்டில் உள்ள பமோகா
4.இந்தியாவில் உள்ள நாக்பூர்
5. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கியூசான் சிட்டி
6. ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத்
7.. இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள மதுரை
8. பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்
9. நைஜீரியாவில் உள்ள லாகோஸ்
10. பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்

இதையும் படிக்க : மழைக்கால எதிரொலி: கோயம்பேட்டில் எகிறியது காய்கறி விலை…

ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டில் மிக முக்கிய கோவில் நகரமான மதுரைக்கு 7 ஆம் இடம் கிடைத்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வெப்பநிலையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது வெப்பநிலை மட்டுமல்லாமல், மக்களின் உடல்நலம், பொருளாதார சூழல் ஆகியவை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது. நகரங்களின் வெப்பநிலையை சமாளிக்கும் திறன் இந்த ஆய்வில் மிக முக்கியங்களில் அம்சமாக கருத்தில் கொள்ளப்பட்டது.

ஆய்வில் கருத்தில் கொள்ளப்பட்ட விஷயங்கள்

வெறும் அதிக வெப்பநிலை மட்டுமல்லாமல், மக்களின் பாதிக்கப்படக்கூடிய நிலை, பொருளாதார சூழல், சுகாதார வசதிகள், நகரங்களின் வெப்பத்தை சமாளிக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இணைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஒவ்வொரு நகரத்திலும் வெப்ப அலையின் தாக்கம், மக்கள் தொகையில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை, பொருளாதார சூழல், ஏசி பயன்பாடு, நகரங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை, மருத்துவ வசதிகள், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன.

இதையும் படிக்க : மாறப் போகிறது சென்னையின் முகம்… மாறப்போகும் முக்கிய இடங்கள்…

இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளில் வெப்ப அலையால் பாதிக்கப்படும் நகரங்கள் அதிகமிருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுல்ளது. உலகில் ஆபத்துகளை எதிர்கொள்ளும் நகரங்களில் 95 சதவிகிதத்திற்கு மேல் தெற்கு ஆசியா,சஹாரா பாலைவனத்திற்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் அமமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us