AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026 போல 2031ல் மாபெரும் ஆட்சி மாற்றம் – ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை உறுதி

பாஜக முன்னாள் தமிழக தலைவராக இருந்த அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி திடீரென வீ த லீடர்ஸ் என்ற இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கத்தின் முதல் மாநாடு ஜூலை 12, 2026 இன்று மாலை கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற பெயரில் நடைபெற்றது.

2026 போல 2031ல் மாபெரும் ஆட்சி மாற்றம்  – ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை உறுதி
அண்ணாமலை
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Jul 2026 19:32 PM IST

கோவை, ஜூலை 12 : பாஜக முன்னாள் தமிழக தலைவராக இருந்த அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி திடீரென வீ த லீடர்ஸ் என்ற இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கத்தின் முதல் மாநாடு ஜூலை 12, 2026 இன்று மாலை கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற பெயரில் நடைபெற்றது. இதில் அந்த இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.

‘2026 போல 2031ல் மாபெரும் ஆட்சி மாற்றம்’

இந்த நிகழ்ச்சியில் வீ தி லீடர்ஸ் என்ற பெயரில் ஒரு செயலியை அண்ணாமலை அறிமுகப்படுத்தினார். சென்னையில் கல்வி நிறுவனங்கள், ஆன்மிக வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு வலியுறுத்தல் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்க : எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் – அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 38 நாட்களில் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கிறார்கள். அது 50 லட்சம் என்ற இலக்கை அடையும்போது தமிழக மக்கள் நம்மை அழைக்கிறார்கள் என்று பொருள். அடுத்த 6 மாதங்களுக்கான இலக்கு தெளிவாக இருக்கிறது. அடுத்த மாதம் சுற்றுச்சூழலுக்கான மாதம். 50 லட்சம் மரங்கள் நம் அமைப்பால் நடப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகள் நலன் என அடுத்த 6 மாதங்களுக்கு தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளை எடுத்து வீ தி லீடர்ஸ் அமைப்பு மாற்றத்தை கொண்டு வரவிருக்கிறோம் என்றார்.

மேலும் பேசிய அவர் இந்த அமைப்பில் 39 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் 50 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இந்த 39 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் 2026ல் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தார்கள். அதே போல 2031லும் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவார்கள் என அண்ணாமலை உறுதியாக தெரிவித்தார்.

இதையும் படிக்க : பழனி முருகன் கோவில் தங்கும் விடுதி கட்டணம் உயர்வு – எவ்வளவு தெரியுமா?

மேலும் பேசிய அவர், பெண்களுக்கு நடக்கும் கொடுமையில் மது உள்ளது. மது எல்லா பக்கமும் கலந்து விட்டது. தைரியமாக மது குடிக்கும் காலம் இது. மது பழக்கம் அடிப்படையில் இருந்து ஒழிக்க வேண்டும். மது மற்றும் போதை ஒழிப்பை அரசும், காவல்துறையும் செய்யாது நாம் தான் செய்ய வேண்டும் என்றார்

தொடர்ந்து பேசிய அவர், மக்கள் பணி செய்யும் போது மக்கள் நம்முடன் வருவார்கள். இந்த ஜூலை மட்டுமல்ல, இனி வரும் ஜூலை எல்லாம் போதை எதிர்ப்பு பொருள் மாநாடு நடைபெறும். 1980 ரெட் ரிப்பன் பேண்ட் அமெரிக்கர்கள் செய்தார்கள்.நாம் வெள்ளை பேண்ட் கொண்டு வந்துள்ளோம் என்று பேசினார்.

Follow Us