பழனி முருகன் கோவில் தங்கும் விடுதி கட்டணம் உயர்வு – எவ்வளவு தெரியுமா?
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் கட்டணம் ஜூலை 13, 2026 நாளை முதல் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தங்கும் விடுதியின் கட்டணம் ரூ.300 முதல் ரூ.1500 வரை உயரவுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல், ஜூலை 12 : திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் கட்டணம் ஜூலை 13, 2026 நாளை முதல் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தங்கும் விடுதியின் கட்டணம் ரூ.300 முதல் ரூ.1500 வரை உயரவுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஜூலை 12, 2026 நாளை முதல் ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனி முருகன் கோவில் தங்கும் விடுதி கட்டணம் உயர்வு
பழனியில் முருகன் கோவில் மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில் அதிரடி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அந்த சொத்து தொடர்பாக செய்யப்பட்டிருந்த சட்டவிரோத பத்திரப்பதிவை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருமடச் சொத்துகளை பாதுகாக்கவும், மீட்கவும் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : “அன்புமணி உள்ளே, திருமா வெளியே?”.. எங்களை தனிமைப்படுத்த பார்க்கிறார்கள்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு!!
பழனி தண்டாயுதபாணி சுவாமிகோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவச மற்றும் கட்டண சேவைகளை வழங்கி வருகிறது. அதில், சிறப்பு கட்டண தரிசனம், அபிஷேகம், அர்ச்சனை, தங்க தொட்டில் பிராத்தனை, பூஜை பொருட்கள் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிராசதம் விற்பனை, நன்கொடைகள், சொத்துகள், முதலீட்டு வட்டி, தங்கும் விடுதி வாடகை என 33 இனங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் கோவிலுக்கு ரூ.1,414.83 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.353.89 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை வருமானம் அதிகரித்துள்ளது. 2020-21-ல் ரூ.110.61 கோடியாக இருந்த ஆண்டு வருமானம், 5 ஆண்டுகளுக்கு பிறகு 2 மடங்கு அதிகரித்துள்ளது. அதன் மதிப்பு ரூ.243.28 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “கரூர் உயிரிழப்பு சதித் திட்டத்தால் நடந்தது!” – திமுக-விற்குப் பதிலடி கொடுத்து பரபரப்பைக் கிளப்பிய அமைச்சர் நிர்மல் குமார்!
மேலும், பக்தர்கள் நலன் கருதி நாள் முழுவதும் அன்னதானம் மற்றும் பிரசாதம், குழந்தைகளுக்கு காய்ச்சிய பால், தேவஸ்தான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 2 வேளை உணவு, மாற்றுத்திறனாளிகளுக்கு ரோப் கார் மற்றும் வின்ச் ரெயிலில் இலவசமாக பயணிக்க வசதி உள்பட 28 கட்டணமில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.145.26 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் அடைந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.