AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இரும்பு தகடுகள் அறுந்து விழுந்து விபத்து – 3 வயது சிறுவன் பரிதாப பலி – அதிர்ச்சி தகவல்

சென்னையை அடுத்த புழல் அருகே பாதாள சாக்கடை பணியின்போது கிரேனின் ரோப் அறுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது ராட்சத பைப் விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரும்பு தகடுகள் அறுந்து விழுந்து விபத்து – 3 வயது சிறுவன் பரிதாப பலி – அதிர்ச்சி தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Jul 2026 14:49 PM IST

சென்னை, ஜூலை 12 :  சென்னையை அடுத்த புழல் அருகே பாதாள சாக்கடை பணியின்போது கிரேனின் ரோப் அறுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது ராட்சத பைப் விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் தந்தை படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், திட்ட துணை மேலாளர், மேற்பார்வையாளர், ஜேசிபி ஓட்டுநர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

இரும்பு தகடுகள் அறுந்து விழுந்து விபத்து

சென்னையை அடுத்த புழல் அருகே காவாங்கரை என்ற பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜூலை 12, 2026 இன்று காலை தந்தையும் 2 வயது மகனும் நடந்து சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் இரும்பு தகடு தூக்கப்பட்ட ரோப் திடீரென அறுந்து, அந்த வழியாக நடந்து சென்ற சிறுவன் மீது விழுந்திருக்கிறது. இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. சிறுவனின் தந்தைக்கு இந்த விபத்தில் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க : ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி இதை செஞ்சே ஆகணும்.. அமைச்சர் அதிரடி!!

இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவனம் உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனையடுத்து தந்தை அளித்த புகாரின் பேரில் திட்ட மேலாளர் முத்துக்குமார், மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஜேசிபி ஆபரேட்டர் ரமேஷ் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதாள சாக்கடை பணிகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செய்யப்பட்டதா அருகில் சாலை இருக்கும் நிலையில் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : வியட்நாம் படகு விபத்து – 10 தமிழர்கள் மரணம் – வெளியான விவரம்

கடந்த சில நாட்களுக்கு முன் திருவையாறு அருகே மின் கம்பி அறுந்து விழுந்த விபத்தில் இளைஞர் உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சை மாவட்டம் செம்மங்குடியில் பொறியியல் பட்டதாரியான காமேஷ்வரன் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பலத்த காற்றால் மின்கம்பி அறுந்து விழுந்து காமேஷ்வரன் மீது பட்டதில் மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மழை காலங்களில் பழுநதடைந்த மின் கம்பிகளை உடனே மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow Us