கபாலி படத்தில் எனக்காக பேசிய ரஜினிகாந்த் சார் – சந்தோஷ் நாராயணன் ஓபன் டாக்
Santhosh Narayanan about Kabali Movie | தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கபாலி படம் குறித்து பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவர் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து பலப் படங்கள் இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் ஒன்றாக அட்டக்கத்தி என்ற படத்தின் மூலமாகதான் அறிமுகம் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கூட்டணியில் வெளியான படங்கள் மட்டும் இன்றி அந்தப் படங்களில் வெளியான பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இவர்களின் கூட்டணியில் வெளியான படங்களில் ஒன்று கபாலி.
இயக்குநர் பா.ரஞ்சித் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிகை ராதிகா ஆப்தே நடித்து இருந்த நிலையில் வில்லனாக வின்ஸ்டன் சாவோ நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து தன்சிகா, தினேஷ், கிஷோர், கலையரசன், ஜான் விஜய், நாசர், ரோஸ்யம் நோர், ரித்விகா, சங்கிலி முருகன் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.




கபாலி படத்தில் எனக்காக பேசிய ரஜினிகாந்த் சார்
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கபாலி படத்தின் டீசரை படக்குழுவினர் வேறு மாதிரியாக கேட்டதாகவும் ஆனால் அவர்களிடம் தன் மனதில் இருந்த ஐடியாவை கூறிய போது ரஜினிகாந்த் நீங்க பண்ணுங்க நீங்க செஞ்சா நல்லா இருக்கும் என்று கூறியதாகவும் தெரிவித்தார். அப்படி அவர் சப்போர்ட் செய்ததுதான் கபாலி படத்தின் டீசர் என்று சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
Also Read… Sai Abhyankkar: சாய் அபயங்கரின் நியூ இன்டீ பாடலில் இணையும் பிரபல நடிகை.. அட அவர்தான்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Kabali teaser enna vera maari panna sonnaanga.. apparam naan request panni idha vainga nu sonnan. Finally, Rajini sir neenga pannunga nalla iruku nu sonnaaru..
And the rest is history 🔥#Rajinikanth pic.twitter.com/IDScAcxbnN
— Abbishekh Raaja (@abbi0410) July 10, 2026
Also Read… ஹார்ட் பீட் சீசன் 3 சீரிஸ் ரசிகர்களே ரெடியா.. ரிலீஸ் தேதியுடன் வெளியான புரோமோ!