Sai Abhyankkar: சாய் அபயங்கரின் நியூ இன்டீ பாடலில் இணையும் பிரபல நடிகை.. அட அவர்தான்!
Sai Abhyankkars New Indie Song: தென்னிந்திய சினிமாவில் தற்போது இளம் இசையமைப்பாளராக பணியாற்றிவருபவர் சாய் அபயங்கர். இவர் இறுதியாக பவழ மல்லி என்ற ஆல்ப்ம் பாடலை வெளியிட்டிருந்தார். இந்த ஆல்பம் பாடலுக்கு பின், தற்போது புது பாடல் ஒன்றை உருவாக்கிவருகிறாராம். அதில் பிரபல நடிகை ஒருவர் நடனமாடுகிறாராம். அது யார் என விவரமாக பார்க்கலாம்.
கட்சி சேர (Katchi Sera) என்ற இன்டீ பாடலின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இந்த பாடலில் நடிகை சம்யுக்தாவுடன் இணைந்து நடனமாடியிருந்தார். தனது இப்பாடலின் மூலம் பிரபலமான இவர், இதையடுத்து ஆச கூட, சித்தர புத்திரி, விழி வீக்குற போன்ற ஆல்பம் பாடல்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதற்கு பின், லோகேஷ் கனகராஜின் (Lokesh kanagaraj) தயாரிப்பில் உருவாகிவரும், பென்ஸ் (Benz) படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். இதன் மூலம் அறிமுகமானாலும், இவரின் இசையில் ரிலீசான முதல் படம் டியூட் (Dude). பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக மாறியது.
சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றிவந்தாலும், அவ்வப்போது இன்டீ பாடல்களை வெளியிட்டுவருகிறார். இறுதியாக தனது இசையமைப்பில் பவழ மல்லி (Pavazha Malli) என்ற பாடலை வெளியிட்டிருந்தார். இதில் நடிகை கயாடு லோஹருடன் (Kayadu Lohar) இணைந்து நடனமாடியிருந்தார். தற்போது புது இன்டீ பாடல் ஒன்றை உருவாக்கிவருகிறாராம்.




இதையும் படிங்க: ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ லாஞ்ச் எங்கு எப்போது நடைபெறும்? வைரலாகும் தகவல்
சாய் அபயங்கரின் புது இன்டீ பாடலில் நடனமாடும் மலையாள நடிகை:
இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையமைப்பில், ரோமெண்டிக் மற்றும் காதல் பாடலாக புது இன்டீ பாடல் உருவாகிறதாம். இந்த பாடலுக்கான பணிகளில் சாய் அபயங்கர் தற்போது இருக்கும் நிலையில், இதில் இந்தத் நடிகை நடனமாடுகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த விதத்தில், இவரின் இசையில் உருவாகும் 6வது பாடலுக்கு மலையாள நடிகை மமிதா பைஜூ நடனமாடுகிறாராம். இன்னும் சில மாதங்களில் இப்பாடலும் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கப் அடிப்போம்.. பந்தயத்தில் ஜெயிப்போம் – சேயோன் படம் குறித்து சிவகார்த்திகேயன் பேச்சு!
சாய் அபயங்கரின் இசையில் மமிதா இணைவது குறித்து வைரலாகும் பதிவு:
SAI × MAMITHA – New Album Loading! 🎶✨
After delivering several chart-topping independent tracks with actresses like Samyuktha, Preity Mukhundhan, Sanvee Meghana, and Kayadu Lohar, composer #SaiAbhyankkar is now reportedly teaming up with #MamithaBaiju for his next music album.…— M.Rajaa (@therajaavoice_x) July 10, 2026
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தற்போது தொடர்ந்து சினிமாவில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகிவருகிறார். இறுதியாக கருப்பு படம் இவரின் இசையில் வெளியான நிலையில், சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது, கார்த்தியின் மார்ஷல், சூர்யாவின் 48வது படம், தனுஷின் ஓம் படம், அல்லு அர்ஜுனின் ராக்கா, ராகவா லாரன்ஸின் பென்ஸ், துருவ் விக்ரமின் 4வது படம், பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் புது படம் மற்றும் தனுஷின் தமிழ் முருகன் போன்ற படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். மேலும் புது படங்களுக்கு இவர் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியும் வருகிறாராம்.