Sivakarthikeyan: கப் அடிப்போம்.. பந்தயத்தில் ஜெயிப்போம் – சேயோன் படம் குறித்து சிவகார்த்திகேயன் பேச்சு!
Sivakarthikeyans Seyon Update: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாயகனாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தாய் கிழவி பட இயக்குநருடன் சேயோன் என்ற படத்தில் இணைந்துள்ளார். அண்மையில் தாய் கிழவி 100வது நாள் வெற்றிவிழாவில் பேசிய சிவகார்த்திகேயன், சேயோன் படம் மற்றும் இயக்குநர் சிவகுமார் முருகேசன் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து புத்தம் புது படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக பராசக்தி (Parasakthi) என்ற படமானது ரிலீஸாகியிருந்தது. இதை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க, டான் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிறுவனம்தான் தனக்கு சம்பள பாக்கி வைத்ததாக சுதா கொங்கரா சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பராசக்தி படமானது 2026 ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றியை அடுத்தாக சிவகார்த்திகேயன் இணைந்த படம் சேயோன் (Seyon).
இதை தாய் கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அண்மையில் தாய் கிழவி (Thaai Kizhavi) படத்தின் 100வது நாள் வெற்றிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் சேயோன் மற்றும் இயக்குநர் சிவகுமார் முருகேசன் குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: இந்த போட்டோவில் கியூட்டாக சிறுமி யார் தெரியுமா இவர் நடிகர் விஷாலின் நெருங்கிய தோழி.. அட இந்த நடிகையா?
சேயோன் படத்தின் வெற்றி குறித்து முன்பே உறுதி கூறிய சிவகார்த்திகேயன்:
நடிகர் சிவகார்த்திகேயன், அதில் “சிவகுமார் முருகேசன், தாய் கிழவி பட ஆடியோ லாஞ்சில் சொன்னாரு, “ஒரு மூட்டை விதை நெல் கொடுத்திருக்கிறார், நிச்சயம் பெரிய விளைச்சலை காட்டுவேன் என சொன்னாரு. விளைச்சல் அமோகமாக இருக்கும், ஏனென்றால் பின்னணி உங்க அண்ணன் நான் எப்போவும் நிற்பேன். நான் இப்பொது ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கிறேன், ஏன் தாய் கிழவி படம் சூப்பராக வந்தது, எப்படி ஹிட்டாச்சு என பார்க்கிறேன்.
இதையும் படிங்க: கிஷன்தாஸூக்கு ஜோடியாகும் சஞ்சனா.. புது பட டைட்டில் போஸ்டரை வெளியிட்ட ஆர்யா!
நான் சேயோன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்ததிலிருந்து, சிவகுமார் முருகேசனிடம் பேசவே இல்லை. ஆனால் மொத்த படக்குழுவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். யார் என்ன வேலை செய்யவேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். ரேஸில் கண்ணை மூடி ஓடும் குதிரையைப்போலவே சேயோன் படத்தில் நான் இருக்கிறேன். கப் அடிச்சுடுவோம், பந்தயமும் அடிச்சிடுவோம் என அதில் அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது தொடர்பான வீடியோ பதிவு:
பந்தயம் அடிக்கிறோம் 🥵🔥#Seyon 🦚 pic.twitter.com/OrB3F60UVP
— Bumblebee ⛊ ⚡︎ 🦚 ˢᵉʸᵒⁿ ꜝꜝ (@bumblebeeskfan) July 10, 2026
சேயோன் படத்தின் ஷூட்டிங் மதுரை பகுதியில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சிவகார்த்திகேயனுடன் தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையோடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.