“புது அவதாரம் எடுத்த அண்ணாமலை!”.. பொள்ளாச்சியில் நாளை கூடும் “வி த லீடர்ஸ்” முதல் பிரம்மாண்ட மாநாடு!!
பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை, தனது புதிய அவதாரமான ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாட்டை ‘போதையில்லா தமிழகம்’ என்ற பெயரில் நாளை பொள்ளாச்சியில் நடத்துகிறார். சுமார் 25,000 இளைஞர்கள் பங்கேற்க உள்ள இந்த மாநாட்டிற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொள்ளாச்சி, ஜூலை 11: பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி “வீ த லீடர்ஸ்” (We The Leaders) என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த புதிய அமைப்பின் அதிகாரப்பூர்வ முதல் மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொள்ளாச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பாஜகவிலிருந்து விலகி புதிய அமைப்பைத் தொடங்கிய பிறகு, அண்ணாமலை நடத்தும் முதல் பெரிய பொதுமாநாடு இதுவாக இருப்பதால், தமிழக அரசியல் வட்டாரங்களில் இந்த மாநாட்டிற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும் படிக்க: நிலத்தை அளக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்.. போலீசின் செக்மேட்டில் சிக்கிய சர்வேயர்.. தென்காசி டிஎஸ்பி பாலசுதரின் பக்கா மாஸ்டர் பிளான்!
‘வீ த லீடர்ஸ்’ அமைப்பை தொடங்கிய அண்ணாமலை:
அதனைத் தொடர்ந்து, ஜூன் மாத இரண்டாவது வாரத்தில் ‘வீ த லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்குவதாக அறிவித்த அவர், புதிய அரசியல் மாற்றத்திற்கான அடித்தளமாக இந்த அமைப்பு செயல்படும் என்றும், ஆரம்பத்தில் சமூக இயக்கமாக செயல்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்றும் கூறினார். மேலும், wetheleaders.org என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி, தன்னுடன் இணைந்து பயணிக்க விரும்புவோர் அதில் பெயர் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்து உறுப்பினர்களாக சேரலாம் என்றும் அழைப்பு விடுத்தார்.
“போதையில்லா தமிழகம்” விழிப்புணர்வு மாநாடு:
அண்ணாமலையின் புதிய அவதாரமாகப் பார்க்கப்படும் இந்த அமைப்பின் முதல் மாநாட்டிற்கு, “போதையில்லா தமிழகம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.
மாநாட்டுத் திடல் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள்:
பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ‘ஆட்சிவெட்டி’ என்ற பகுதியில் இதற்கான பிரம்மாண்ட திடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 2-ஆம் தேதி இதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டு, பந்தல் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. தற்போது மாநாட்டுப் பணிகள் சுமார் 75% மேல் முற்றிலும் நிறைவடைந்து, இறுதிக்கட்ட அலங்காரப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பொள்ளாச்சியின் பாரம்பரிய முகப்பு:
மாநாட்டு திடலின் நுழைவாயில் பொள்ளாச்சியின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்னை நகரமான பொள்ளாச்சியைக் குறிக்கும் தென்னை மரங்களின் புகைப்படங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள முக்கிய அணைகளின் (Dams) பிரம்மாண்ட பிளக்ஸ் கட்டவுட்டுகள் நுழைவாயிலில் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
25,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க எதிர்பார்ப்பு:
இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 25,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு என்பதால் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் படிக்க: ரூ.35 கோடி பேரம்.. அதிரடியில் இறங்கிய போலீஸ்.. தவெக எம்எல்ஏ வழக்கில் மேலும் 2 பேர் அதிரடி கைது!
மாநாட்டிற்கு வருபவர்களின் வசதிக்காக பிரம்மாண்ட வாகன நிறுத்துமிடம், இருக்கை வசதிகள் மற்றும் அவசரத் தேவைகளுக்கான மருத்துவ முகாம்களும் திடலில் அமைக்கப்பட்டு வருகின்றன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் முன்கூட்டியே நுழைவு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.