AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் – அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு

கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், மதுரை, சேலம், திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர் என்றார்.

எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் – அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு
Tasmac Employees
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Jul 2026 16:56 PM IST

சென்னை, ஜூலை 12 : கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், மதுரை, சேலம், திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம்.
தற்போதுள்ள நிதிச் சூழலை புரிந்துகொண்டு அரசின் சீரமைப்பு முயற்சிக்கு தொழிலாளர்கள் வரவேற்பு அளிக்கின்றனர் என்றார்.

அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு

மேலும் பேசிய அவர், டாஸ்மாக் தொழிலாளர்களுடன் நேரடியாக பேசினேன். தொழிலாளர்கள் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர்ய பின்விளைவுகளை ஏற்படுத்தும் போராட்டங்களை கைவிட்டு அரசுக்கு தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு வசதியை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : “முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு!” – திமுக எம்பி ஆ.ராசா மீது பாய்ந்த பரபரப்பு புகார்!

பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதால், எங்களை திருடன் என கூறுவதை ஏற்க முடியாது என்றும், முறையான கட்டமைப்பை உருவாக்கி கொடுத்தால், எம்ஆர்பி விலைக்கே மதுபாட்டில் விற்க தயார் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை துறை அமைச்சர் விக்​னேஷ், எதிர்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர் எனவும் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க : “கோர்ட் அதிரடி உத்தரவு”.. சிங்கப்பூர் சிகிச்சையை பாதியில் முடித்துவிட்டு சென்னை திரும்பும் எ.வ.வேலு!!

கடந்த சில நாட்களுக்கு முன் டாஸ்​மாக் ஊழியர்​களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்​கப்​படு​வ​தாக​வும், இனி கூடு​தல் விலைக்கு விற்​பனை செய்யப்​பட்​டால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் எனவும் அமைச்​சர் விக்​னேஷ் தெரி​வித்​திருந்தார். மேலும் இது​வரை டாஸ்​மாக் ஊழியர்​களுக்கு வழங்​கப்​பட்ட ஊதிய உயர்வு அதி​கபட்​ச​மாக ரூ.2,000 மட்​டுமே இருந்​தது. ஆனால், இந்த முறை முதல்​வர் ஊழியர்​களின் கோரிக்​கையை பரிசீலித்து 25 சதவீத ஊதிய உயர்வை வழங்க உத்​தர​விட்​டுள்​ளார என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசிய அவர், இனி எம்​ஆர்​பிக்கு மேல் மது​பானம் விற்​கக்​கூ​டாது. அரசு நிர்ணயித்த விலைக்கே மது​பானங்​கள் விற்​கப்பட வேண்​டும். முன்​ன​தாக கூடு​தல் தொகை வசூலித்​தவர்​களுக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டது. தற்​போது இடைநீக்​கம் செய்​யப்​படு​கிறது. அதே குற்​றத்தை மீண்​டும் செய்​தால் பணிநீக்​கம் வரை நடவடிக்கை எடுக்​கப்​படும். எனினும், ஊதிய உயர்​வுக்​காக மது​பான விலை உயர்த்​தப்​ப​டாது. ஊதிய உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.

 

Follow Us