AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுபானங்கள் மீது ரூ.10 செஸ் வரி விதிக்கப் பரிந்துரை.. உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் பரபரப்பு அறிக்கை!!

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்காகக் காலி மதுப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் புதிய மாற்றங்களைச் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, காலி பாட்டில்களுக்காகத் தனியாக 10 ரூபாய் வசூலிப்பதற்குப் பதிலாக, அந்தத் தொகையை மதுபானத்தின் விற்பனை விலையிலேயே (MRP) சேர்த்து செஸ் வரியாக விதிக்க வணிக வரித்துறை பரிந்துரைத்துள்ளது.

மதுபானங்கள் மீது ரூ.10 செஸ் வரி விதிக்கப் பரிந்துரை.. உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் பரபரப்பு அறிக்கை!!
டாஸ்மாக்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 11 Jul 2026 14:10 PM IST

சென்னை, ஜூலை 11: தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் மீது கூடுதலாக ரூ.10 செஸ் வரி (Cess Tax) விதிப்பது தொடர்பாக, வணிக வரித்துறை ஆணையர் அரசுக்குக் கருத்துரு அனுப்பியுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், காலி மதுப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் நிர்வாகத்தால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, மதுபானம் வாங்கும் போது கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு, காலி பாட்டிலை மீண்டும் ஒப்படைக்கும் போது அந்த ரூ.10 வாடிக்கையாளர்களிடம் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை முழுமையாக மாற்றி அமைப்பது குறித்துப் புதிய அரசு பரிசீலித்து வருவதாகக் கடந்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: ரூ.35 கோடி பேரம்.. அதிரடியில் இறங்கிய போலீஸ்.. தவெக எம்எல்ஏ வழக்கில் மேலும் 2 பேர் அதிரடி கைது!

உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் அறிக்கை:

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சில முக்கியத் திட்டங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதன்படி, காலி பாட்டில்களுக்காகத் தனியாக ரூ.10 வசூலிப்பதற்குப் பதிலாக, அந்தத் தொகையை மதுபானத்தின் ‘அதிகபட்ச விற்பனை விலை’யுடனேயே (MRP) சேர்த்து விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

உற்பத்தி நிறுவனங்களுக்கே பொறுப்பு:

காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவது மற்றும் அதனை மறுசுழற்சி செய்வது போன்ற பணிகளை, சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமே ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள மதுவிலக்குத் துறை ஆணையருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தில் திருத்தம்:

மதுபானங்களின் விற்பனை விலையுடன் கூடுதலாக ரூ.10 செஸ் வரி விதிப்பது குறித்து வணிக வரித்துறை அனுப்பிய பரிந்துரையின் பேரில், மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் (VAT Act) விதிகளில் திருத்தங்களைச் செய்வது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

மேலும் படிக்க: நிலத்தை அளக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்.. போலீசின் செக்மேட்டில் சிக்கிய சர்வேயர்.. தென்காசி டிஎஸ்பி பாலசுதரின் பக்கா மாஸ்டர் பிளான்!

நீதிமன்றத்தின் அடுத்தகட்ட உத்தரவு:

டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 6 வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர். மேலும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசுக்கும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளனர்.

Follow Us