AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ING vs ENG: தொடர்ந்து சொதப்பல்.. திலக் வர்மா நீக்கமா..? இந்திய பிளேயிங் லெவன் விவரம்!

IND vs ENG 5th T20 Playing 11: ஷ்ரேயஸ் ஐயர் 4வது இடத்தில் பேட்டிங் செய்கிறார். சில சமயங்களில் சிவம் துபே 5வது இடத்திலும், சில சமயங்களில் அக்சர் பேட்டிங்கிலும் களமிறக்கப்படுகிறார்கள். பேட்டிங் வரிசையில் ஏற்படும் இந்த தொடர்ச்சியான மாற்றம், அணியின் மீதான அழுத்தத்தைப் பிரதிபலிக்கிறது. பேட்டிங் ஆர்டர் அடிப்படையில் கடைசி வரும் திலக் வர்மாவின் பேட்டிங்கும் சிறப்பான ஃபார்மில் இல்லை.

ING vs ENG: தொடர்ந்து சொதப்பல்.. திலக் வர்மா நீக்கமா..? இந்திய பிளேயிங் லெவன் விவரம்!
இந்தியா Vs இங்கிலாந்து 5வது டி20
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Jul 2026 15:00 PM IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு (ING vs ENG T20 Series) இடையேயான ஐந்த5வது டி20 போட்டி, ஹாம்ப்ஷயரின் வெஸ்ட் எண்டில் உள்ள ரோஸ் பவுல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று அதாவது 2026 ஜூலை 11ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கும். இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் உள்ளது. அதே சமயம், இந்திய அணிக்கு (Indian Cricket Team) இது கௌரவத்திற்கான போராட்டமாகும். ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையின் கீழ், இந்தியா தொடர்ச்சியாக 2 டி20 தொடர்களை இழந்துள்ளது. அதேநேரத்தில், சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படாதது குறித்தும், இன்றைய ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அப்படியென்றால், யார் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள்? துணை கேப்டன் திலக் வர்மா நீக்கப்பட வாய்ப்புள்ளதா? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இங்கிலாந்து மண்ணில் வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்… தோல்விக்கு மத்தியில் புதிய சாதனை!

முதல் 3 இடங்களில் மாற்றம் கடினம்

வைபவ் சூர்யவன்ஷி இந்த இங்கிலாந்து டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானார். சூர்யவன்ஷி தனது மூன3று இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் எடுக்கவில்லை என்றாலும், அவர் மீதான எதிர்பார்ப்பையும் ஐபிஎல் தொடரில் அவரது செயல்திறனையும் கருத்தில் கொண்டு, அவருக்கு சில வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஷான் கிஷன் அல்லது அபிஷேக் சர்மா ஆகியோரை அணியிலிருந்து நீக்குவது கடினம், ஏனெனில் அவர்கள் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முறையே முதல் மற்றும் 2ம் இடங்களில் உள்ளனர். இதன் விளைவாக, முதல் மூன்று இடங்களில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை.

சஞ்சு சாம்சன் விளையாடுவாரா?

வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைக்க வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கைகள் இருந்தன. சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக வைபவ் இந்திய அணியில் இடம்பிடித்தார். இருப்பினும், டி20 உலகக் கோப்பையில் தொடரின் சிறந்த வீரரை நீக்கியது நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியதுடன், பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் வியூகம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இப்போது, சஞ்சு ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டால், யார் அணியிலிருந்து நீக்கப்படலாம் என்பதுதான்.

ஷ்ரேயஸ் ஐயர் 4வது இடத்தில் பேட்டிங் செய்கிறார். சில சமயங்களில் சிவம் துபே 5வது இடத்திலும், சில சமயங்களில் அக்சர் பேட்டிங்கிலும் களமிறக்கப்படுகிறார்கள். பேட்டிங் வரிசையில் ஏற்படும் இந்த தொடர்ச்சியான மாற்றம், அணியின் மீதான அழுத்தத்தைப் பிரதிபலிக்கிறது. பேட்டிங் ஆர்டர் அடிப்படையில் கடைசி வரும் திலக் வர்மாவின் பேட்டிங்கும் சிறப்பான ஃபார்மில் இல்லை. அதன்படி, திலக் வர்மாவை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால், தற்போது திலக் வர்மாவிடம் துணை கேப்டன் பதவி இருப்பதால் அணியிலிருந்து நீக்கப்படுவது சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டால், அக்சர் படேல் அல்லது வாஷிங்டன் சுந்தர் நீக்கப்படலாம். இந்தத் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாகச் செயல்படாத சிவம் துபேவும் நீக்கப்படலாம்.

இந்தியாவின் உத்தேச ஆடும் 11 பேர் கொண்ட அணி

வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சஞ்சு சாம்சன்/வாஷிங்டன் சுந்தர், திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங்.

ALSO READ: வைபவ் சூர்யவன்ஷி – அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை… அப்படி என்ன பண்ணாங்க?

இந்தியா – இங்கிலாந்து 5வது டி20 போட்டியை நேரலையில் எங்கே பார்ப்பது..?

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்குத் தொடங்குகிறது, டாஸ் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு நடைபெறும். இந்தப் போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையாக ஒளிபரப்பப்படும். ஜியோஹாட்ஸ்டார் செயலி மற்றும் சோனிலிவ் ஆகியவற்றிலும் நேரலை ஒளிபரப்பு கிடைக்கும்.

இந்திய அணி

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ்,

Follow Us