பஞ்சாப் மாநிலம் தர்ன் தரண் மாவட்டத்தில், பிரிந்து வாழ்ந்த மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்த கணவர் மீது மைத்துனர் தீ வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் கணவர் மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்ற பெண் என இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் லவ்ப்ரீத் சிங் மற்றும் குர்ஜித் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.