AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமைச்சரான வன்னி அரசு, ஷாஜகான்.. வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்.. திமுகவினருக்கு வைத்த முக்கிய வேண்டுகோள்!!

முன்னதாக இன்று காலை, திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஆ. ராசா, விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் தவெக அமைச்சரவையில் இணைந்ததைச் சமூக வலைத்தளத்தில் மிகக் காரசாரமாக விமர்சித்து ஒரு பதிவை இட்டிருந்தார். அதற்கு விசிக தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்வினைகள் வெளியாகி, சோஷியல் மீடியாவில் இரு கட்சித் தொண்டர்களுக்கு இடையேயான மோதல் பல மடங்கு அதிகரித்தது.

அமைச்சரான வன்னி அரசு, ஷாஜகான்.. வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்.. திமுகவினருக்கு வைத்த முக்கிய வேண்டுகோள்!!
மு.க.ஸ்டாலின்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 May 2026 13:47 PM IST

தவெக அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக இன்று காலை பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜகான் ஆகிய இருவருக்கும் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கூட்டணி மாற்றம் மற்றும் புதிய அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் இணைந்தது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தங்களது அரசியல் முடிவைத் தன்னாட்சியாகத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் முழுமையாக உண்டு என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சி.வி.சண்முகம் ராஜினாமாவால் காலியான எம்பி பதவி.. ஜூன் 18ல் இடைத்தேர்தல் அறிவிப்பு.. தவெகவின் வியூகம் என்ன?..

“கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்”

விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் தவெக அமைச்சரவையில் இணைந்ததை அடுத்து, சமூக வலைத்தளங்களில் திமுக மற்றும் விசிக தொண்டர்களிடையே கடுமையான விவாதங்களும், விமர்சன மோதல்களும் வெடித்துள்ளன. இந்தச் சூழலில் திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அவசர வேண்டுகோளில், “இந்த நேரத்தில் நமது கட்சியைச் சேர்ந்த எந்தவொரு தொண்டரும், யாரையும் புண்படுத்தும் வகையில் கடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பான வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய கண்ணியமான வழியில் வந்தவர்கள் நாம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது” என அறிவுறுத்தியுள்ளார்.

ஆ.ராசாவின் விமர்சனம்:

முன்னதாக இன்று காலை, திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஆ. ராசா, விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் தவெக அமைச்சரவையில் இணைந்ததைச் சமூக வலைத்தளத்தில் மிகக் காரசாரமாக விமர்சித்து ஒரு பதிவை இட்டிருந்தார். அதற்கு விசிக தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்வினைகள் வெளியாகி, சோஷியல் மீடியாவில் இரு கட்சித் தொண்டர்களுக்கு இடையேயான மோதல் பல மடங்கு அதிகரித்தது. தொண்டர்களிடையேயான இந்த மோதல் போக்கைக் உடனடியாகக் கட்டுப்படுத்தும் விதமாகவும், ஆ. ராசாவின் கருத்துக்கு மறைமுகப் பதில் அளிக்கும் விதமாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அவசர அறிவுறுத்தலைத் தனது கட்சியினருக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: முதல்வர் விஜய்யின் ஆலோசகராக ஜான் ஆரோக்கிய சாமி – விஷ்ணு ரெட்டி நியமனம்?

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி:

தமிழகத்தில் தற்போது உருவாகியுள்ள புதிய அரசியல் சூழலில், தங்களது கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போதைய தவெக அரசின் நல்ல திட்டங்களை நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பாராட்டியும், மக்கள் நலனுக்கு எதிரான அல்லாத விஷயங்களைச் சுட்டிக்காட்டி ஆக்கப்பூர்வமாக விமர்சிக்கும் ஒரு பொறுப்புமிக்க ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகவே திமுக தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Follow Us