முதல்வர் விஜய்யின் ஆலோசகராக ஜான் ஆரோக்கிய சாமி – விஷ்ணு ரெட்டி நியமனம்?
Vishnu Reddy - John Arokiasamy : முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகராக விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கிய சாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தின் புதிய முதல் அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த மே 10- ஆம் தேதி பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, அவரது அமைச்சரவையில் அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர். அதன்படி, தமிழக வெற்றி கழகம் முழு அரசாக செயல்பட தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதல்வரின் தனி செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் அரசு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, முதல்வரின் ( அரசியல்) சிறப்பு அதிகாரியாக விஜயின் ஜோதிடரும், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளருமான ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டன எழுந்த நிலையில், அந்த பணிக்கான உத்தரவை முதல்வர் விஜய் திரும்ப பெற்றார்.
அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கிய சாமி
இந்த நிலையில், முதல்வர் விஜயின் அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் பொது நிகழ்வுகள் ஆலோசகராக விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், அரசியல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி என்பவர் விஜய் கட்சி தொடங்கியது முதல் பல்வேறு கட்ட அரசியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையிலேயே முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார். அதன்படி, அவர் முதல்வர் விஜய்யின் அரசியல் ரீதியான ஆலோசகராக நியமனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்.. தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!




பொது விவகாரங்கள் ஆலோசகராக விஷ்ணு ரெட்டி
இதே போல, விஷ்ணு ரெட்டி என்பவர் முதல்வர் ஜோசப் விஜய்க்கு நெருங்கிய நண்பர் ஆவார். கல்லூரி காலம் முதல் இருவரும் நண்பராக இருந்து வருகின்றனர். முதல்வர் விஜய் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக தனக்கு நெருக்கமான நபர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார். அந்த குழுவில் விஷ்ணு ரெட்டி இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவர் முதல்வர் விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகள் தொடர்பாக ஆலோசனை வழங்கும் ஆலோசகராக நியமனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ரிக்கி ராதன் பண்டிட் இடத்தில் ஜான் ஆரோக்கிய சாமி
தமிழக அரசின் நிர்வாக பணிகளை மேம்படுத்தவும், புதிய அரசுக்கு வழிகாட்டுவதற்காகவும் இரு ஆலோசகர்கள் நியமனங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, முதல்வர் விஜயின் ( அரசியல்) சிறப்பு அதிகாரி பொறுப்பில் ரிக்கி ராதன் பண்டிட் நியமனம் நியமனம் செய்யப்பட்டு வாபஸ் பெறப்பட்ட நிலையில், இந்த பொறுப்பில் ஜான் ஆரோக்கியசாமி நியமனம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் இலாக்காவில் மாற்றம்.. கை மாறிய துறைகள்.. யாருக்கு என்ன?