மு.க.ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை.. சத்யபாமாவுக்கும் வாய்ப்பில்லை!
VS Babu - Satyabhama Not Given Minister Post: சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தி வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மற்றும் திருப்பூர் வடக்கில் வெற்றி பெற்ற சத்யபாமாவுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.
தமிழக வெற்றி கழக அமைச்சரவை விரிவாக்கம் இன்று வியாழக்கிழமை கிண்டியில் அமைந்துள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில், இளைஞர்கள், பெண்கள் என சுமார் 23 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இதில், சுமார் 40 வயதுக்குள்பட்ட 8 எம். எல். ஏ.க்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். 28 வயதே ஆன அவிநாசி தொகுதி எம்எல்ஏவான கமலி மிகவும் இளம் வயது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதை தவிர்த்து கடந்த மே 10- ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் உடன் சேர்த்து என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், சி. டி. ஆர். நிர்மல் குமார், அருண்ராஜ், கீர்த்தனா, ராஜ்மோகன் உள்ளிட்ட 10 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். சென்னையில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபுவுக்கு வாய்ப்பில்லை
இதில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலினை 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளரான வி.எஸ்.பாபவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு. க. ஸ்டாலினை அவரது சொந்த தொகுதியில் தோற்கடித்த வி. எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று பிரிதளவில் பேசப்பட்டு வந்தது.
மேலும் படிக்க: Tamil Nadu Ministers List : பெண் அமைச்சர்கள் எத்தனை பேர்?தமிழ்நாடு அமைச்சரவை முழு பார்வை!




முன்னாள் எம்.பி. சத்யபாமாவுக்கு வாய்ப்பு மறுப்பு
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்ட அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் வி. எஸ். பாபுவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதேபோல, இன்று நடைபெற்ற 2- ஆம் கட்ட அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்விலும் வி. எஸ். பாபுவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதே போல, திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம். எஸ். எம். ஆனந்தனை 96,992 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமாவுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.
வி.எஸ்.பாபு – சத்யபாமா தரப்பினர் இடேயை அதிர்ச்சி
இது வி. எஸ். பாபு மற்றும் சத்தியபாமா தரப்பினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினை அவரது சொந்த தொகுதியில் வீழ்த்திய காரணத்துக்காக வி. எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் நிச்சயம் இடம் வழங்கப்படும் என்றும், இதே போல, அதிமுகவில் முன்னாள் எம்பி யாக இருந்த சத்தியபாமாவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்றும் பேசப்பட்டு வந்த நிலையில், இருவருக்கும் அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Tamil Nadu Ministers Cabinet Expansion Full List : தமிழக அமைச்சரவையில் புதியதாக பதவி ஏற்ற 23 அமைச்சர்கள்.. யார் யார்.. பட்டியல் இதோ!