AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Ministers List: இளம் வயது அமைச்சர்கள்.. கவனிக்க வைத்த தமிழ்நாடு அமைச்சரவை.. யார் யார்?

Youngest Ministers : தமிழக அமைச்சரவை விரிவாக்கம் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த இளம் வயது எம்எல்ஏக்கள் பலர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்கள் யார் யார் என்ற விவரத்தை இந்தப் பதவில் பார்க்கலாம்.

Tamil Nadu Ministers List: இளம் வயது அமைச்சர்கள்.. கவனிக்க வைத்த தமிழ்நாடு அமைச்சரவை.. யார் யார்?
தவெகவில் இளம் வயது அமைச்சர்கள்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 21 May 2026 11:09 AM IST

தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை பதவி ஏற்பு விழா தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று வியாழக்கிழமை ( மே 21- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், சுமார் 23 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். முன்னதாக முதல்வர் ஜோசப் விஜய் பதவி ஏற்பின் போது, ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ், சி. டி. ஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள துறைகளுக்கான அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அமைச்சரவை பதவி ஏற்புக்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் அரசுத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டிருந்தனர்.

தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை விரிவாக்கம்

இதே போல, முதல்வர் ஜோசப் விஜய்யுடன், துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டிருந்தனர். அதன்படி, தமிழக அமைச்சரவை இன்று மே 21- ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதன்படி, தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற இருப்பதாக ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று புதன்கிழமை இரவு வெளியிடப்பட்டது. அதன்படி, இன்று நடைபெற்ற தவெக அமைச்சரவை இதில், தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த சுமார் 23 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

தவெகவில் இளம் வயது அமைச்சர்கள்

  • அறந்தாங்கி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் ஜே. முகமது பர்வேஷ் தனது 36 வயதில் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
  • திருவாடானை தொகுதி தவெக எம். எல். ஏ.வான மருத்துவர் வி. கே . ராஜீவ் தனது 33- ஆவது வயதில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
  • அவிநாசி தொகுதி தவெக எம். எல். ஏ. வான கமலி தனது 28- ஆவது வயதில் அமைச்சராக பதவி ஏற்று உள்ளார்.
  • ஈரோடு கிழக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான விஜய் பாலாஜி தனது 39- ஆவது வயதில் அமைச்சராக பொறுப்பேற்றார்.
  • கும்பகோணம் சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏவான வினோத் தனது 32- ஆவது வயதில் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
  • ஸ்ரீபெரும்புதூர் தவெக சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான தென்னரசு தனது 36- ஆவது வயதில் அமைச்சராக பதவி ஏற்றார்.
  • தாம்பரம் தொகுதி தவெக எம்எல்ஏவான சரத்குமார் தனது 34- ஆவது வயதில் அமைச்சராக பொறுப்பேற்றார்.
  • கிணத்துக்கடவு தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரான விக்னேஷ் தனது 38- ஆவது வயதில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

Follow Us