AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சி.வி.சண்முகம் பதவி சுகத்துக்காக அதிமுகவை அழிக்கிறார்… அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அட்டாக்!

AIADMK whip Agri SS Krishnamoorthy : தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி சுகத்துக்காக ஆதரவு தெரிவித்ததுடன், அதிமுகவை அழித்து வருவதாக எஸ்.பி.வேலுமணி மற்றும் சிவி சண்முகத்தை அதிமுக கொறடாவக நியமிக்கப்பட்டுள்ள அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டி உள்ளார்.

சி.வி.சண்முகம் பதவி சுகத்துக்காக அதிமுகவை அழிக்கிறார்… அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அட்டாக்!
சிவி சண்முகம் பதவி சுகத்துக்காக அதிமுக அழிக்கிறார்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 20 May 2026 15:39 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் எடப்பாடி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இரு அணிகள் பிரிந்து செயல்பட்டு வருகின்றன. இதில், எஸ். பி. வேலுமணி தலைமையிலான அணி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து, எடப்பாடி தலைமையிலான அணி சபாநாயகரிடம் புகார் மனு அளித்துள்ளது. மேலும், அதிமுக சட்டமன்ற குழு தலைவர் பதவி தொடர்பாக எடப்பாடி, எஸ்.பி. வேலுமணி தரப்பினர் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், எஸ். பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பினர் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கட்சியின் கொறடாவாக நியமிக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதியில் 98,000- க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

எடப்பாடி தலைமையில் 95 சதவீத அதிமுகவினர் உள்ளனர்

முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தங்களது தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். 10 தோல்வி பழனிசாமி என்று கேலியாக பேசிய மு. க. ஸ்டாலின் தற்போது தோல்வியை சந்தித்துள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 78 மாவட்ட செயலாளர்களில் 75 பேர் நேரடியாக பங்கேற்றுள்ளனர். இதில், 95 சதவீத அதிமுகவினர் எடப்பாடி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி, சட்டப்பேரவையில் அதிமுக சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரூ.2.90 கோடியில் 40 புதிய வாகனங்கள்.. காரை ஓட்டிப்பார்த்த முதல்வர் விஜய்.. வைரலாகும் காட்சி..

சி.வி. சண்முகத்துக்க பல்வேறு வாய்ப்புகள் வழங்கியவர் எடப்பாடி

சி.வி. சண்முகம் கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டார் என்பதற்காகவே கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் எடப்பாடி பொதுச் செயலாளர் ஆன பின்னர் மாவட்ட செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டவர் தான் சி.வி. சண்முகம். கடந்த 2021- இல் தோல்வியை சந்தித்த சி.வி. சண்முகம் வலியுறுத்தி கேட்டதன் அடிப்படையில் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இது போன்ற பல்வேறு வாய்ப்புகளை எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார்.

பதவி சுகத்துக்காக அதிமுகவை அழிக்கும் சண்முகம்

பொதுச் செயலாளர் எடப்பாடி மீது சி.வி. சண்முகம், எஸ். பி. வேலுமணி ஆகியோர் வைத்து வரும் பொய் குற்றச்சாட்டுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிடுவதற்கு சி.வி. சண்முகம் விரும்பியதால் அதனை எடப்பாடி நிறைவேற்றிக் கொடுத்தார். விழுப்புரம் மாவட்டத்தில் மற்ற தொகுதிகளில் வேட்பாளர் தோல்வி அடைவதற்கு சிவி சண்முகம் தான் காரணம். தேர்தலில் யாரை எதிர்த்து போட்டியிட்டோமோ தற்போது அவருடன் இணைந்து கொண்டு பதவி சுகத்துக்காக அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தவெக அமைச்சரவையில் பங்கேற்குமா விசிக?.. திருமாவளவன் சொல்வது என்ன?

Follow Us