ரூ.2.90 கோடியில் 40 புதிய வாகனங்கள்.. காரை ஓட்டிப்பார்த்த முதல்வர் விஜய்.. வைரலாகும் காட்சி..
40 வாகனங்கள் இன்று ஒப்படைக்கப்பட்ட சூழலில், அதில் இருந்த ஒரு வாகனத்தை முதலமைச்சர் தானே ஓட்டி, அதன் இயக்கம் மற்றும் நிலைமை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்தார். இந்த நிகழ்வு திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல என்றும், வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்து, சாவிகளை ஓட்டுநர்களிடம் ஒப்படைப்பதே நடைமுறை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே 20, 2026: சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சுமார் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 40 புதிய வாகனங்களின் சேவையை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார். 40 புதிய வாகனங்களின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், வாகனங்களின் திறன் மற்றும் இயக்கத்தை பரிசோதிக்கும் வகையில் அங்கு இருந்த ஒரு வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு தானே ஓட்டி சோதனை செய்தார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
வாகனத்தை ஓட்டிப்பார்த்த முதல்வர் விஜய்:
#CMVijay Test Driving the Medical Service Jeep..⭐ The Man is Enjoying his New job..😃🤝 pic.twitter.com/2xSsd7KVki
— Laxmi Kanth (@iammoviebuff007) May 20, 2026
இந்த வாகனங்கள் அனைத்தும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டவையாகும். பொதுவாக முதலமைச்சர் வாகனங்களை வழங்கும் முன்பு அதன் செயல்திறன் மற்றும் இயக்கத்தை சோதனை செய்வது வழக்கமாக இருந்தாலும், நேரடியாக வாகனத்தை ஓட்டி பார்ப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
40 வாகனங்கள் இன்று ஒப்படைக்கப்பட்ட சூழலில், அதில் இருந்த ஒரு வாகனத்தை முதலமைச்சர் தானே ஓட்டி, அதன் இயக்கம் மற்றும் நிலைமை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்தார். இந்த நிகழ்வு திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல என்றும், வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்து, சாவிகளை ஓட்டுநர்களிடம் ஒப்படைப்பதே நடைமுறை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: “அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் பங்குபெற வேண்டும்”.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு!!