AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு.. அவர்கள் யார்.. யார்.. தெரியுமா!

Vijay Makkal Iyakkam 16 Members Took Oath Minister: விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 16 பேர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். அவர்கள் யார்.. யார்... என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு.. அவர்கள் யார்.. யார்.. தெரியுமா!
முதல்வர் விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 21 May 2026 15:24 PM IST

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்பு கடந்த 10- ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 2- ஆவது கட்டமாக அமைச்சரவை பதவியேற்பு விழா தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று ( மே 21- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், 23 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். ஏற்கனவே கடந்த மே 10- ஆம் தேதி முதல்வர் விஜயுடன் சேர்த்து 10 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அதன்படி, தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் 33 அமைச்சர்கள் உள்ளனர். இதில், அதிக அளவிலான இளைஞர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். குறிப்பாக 60 வயதை கடந்த அமைச்சர்கள் வெறும் 4 பேர்களே ஆவர். மீதமுள்ளவர்கள் அனைவரும் 30 முதல் 60 வயதுக்கு உள்பட்டவர்களே ஆவர். தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது உள்ள 33 அமைச்சர்களில் 16 அமைச்சர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர். இவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளனர். இதில்,

மேலும் படிக்க: தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்… 6 தசாப்தங்களுக்கு பிறகு மாற்றம்.. 2 பேருக்கு அடித்தது ஜாக்பாட்!

  • தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த். ( டி. நகர் தொகுதி).
  • மயிலாப்பூர் எம். எல். ஏ. வெங்கட்ரமணன்.
  • காரைக்குடி தொகுதி எம். எல். ஏ. பிரபு.
  • கும்பகோணம் எம். எல். ஏ. வினோத்.
  • கடலூர் எம். எல். ஏ. ராஜ்குமார்.
  • அறந்தாங்கி எம். எல். ஏ. முகமது பர்வேஸ்.
  • சேலம் தெற்கு தொகுதி எம். எல். ஏ. விஜய் தமிழன் பார்த்திபன்.
  • கிணத்துக்கடவு எம். எல். ஏ. விக்னேஷ்.
  • அரக்கோணம் எம். எல். ஏ. காந்தி ராஜ்.
  • ராஜபாளையம் எம். எல். ஏ. ஜெகதீஸ்வரி.

ஈரோடு கிழக்கு தொகுதி எம். எல். ஏ.

  • ஈரோடு கிழக்கு தொகுதி எம். எல். ஏ. எம். விஜய் பாலாஜி.
  • ஸ்ரீரங்கம் தொகுதி எம். எல். ஏ. ரமேஷ்.
  • ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம். எல். ஏ. தென்னரசு.
  • தாம்பரம் தொகுதி எம். எல். ஏ. சரத்குமார்.
  • கோவை வடக்கு தொகுதி எம். எல். ஏ. சம்பத்குமார் ஆகியோர் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தேர்தல் பணியாற்றி வந்தனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகமாக மாறிய விஜய் மக்கள் இயக்கம்

இதேபோல, விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து மொத்தமாக 21 பேர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றுள்ளனர். தமிழக முதல்வர் விஜய் தனது பெயரில் இருந்த மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி அரசியல் பணிகளை முன்னெடுத்து வந்தார். அந்த வகையில், தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார். அதன் அடிப்படையில், தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Tamil Nadu Ministers Cabinet Expansion Full List : தமிழக அமைச்சரவையில் புதியதாக பதவி ஏற்ற 23 அமைச்சர்கள்.. யார் யார்.. பட்டியல் இதோ!

Follow Us