AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் படத்துடன் பதவியேற்ற தவெக எம்எல்ஏ.. “அவர் என்ன கடவுளா” என கண்டித்த புதுச்சேரி சபாநாயகர்!

Puducherry TVK MLA Ramu: புதுச்சேரி சட்டப்பேரவையில் தவெக தலைவர் விஜய் படத்தை காண்பித்து கடவுள் என கூறி எம்எல்ஏவாக பதவி ஏற்க முயன்ற அந்தக் கட்சியின் வேட்பாளரை சபாநாயகர் அன்பழகன் கடுமையாக கண்டித்தார். மேலும், அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டார்.

விஜய் படத்துடன் பதவியேற்ற தவெக எம்எல்ஏ.. “அவர் என்ன கடவுளா” என கண்டித்த புதுச்சேரி சபாநாயகர்!
தவெக எம்எல்ஏவை கண்டித்த புதுச்சேரி சபாநாயகர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 20 May 2026 16:53 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் மே 4- ஆம் தேதி வெளியான நிலையில், என். ஆர். காங்கிரஸ் 12 தொகுதிகள், திமுக 5 தொகுதிகள், பாஜக 4 தொகுதிகள், அதிமுக, காங்கிரஸ், லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை தலா 1 தொகுதிகளில் வெற்றி பெற்றன. தமிழக வெற்றிக் கழக கூட்டணி 3 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றியை பதிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த மே 13- ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரும், என். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான என். ரங்கசாமி மீண்டும் புதுச்சேரி மாநிலத்தின் முதல்- அமைச்சராக பொறுப்பேற்றார். மேலும், புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக உப்பளம் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவான அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, இன்று ( புதன் கிழமை) எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பதவியேற்ற தவெக வேட்பாளர்

இதில், எம்எல்ஏக்கள் அனைவருக்கும் தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ள உப்பளம் தொகுதி அதிமுக எம்எல்ஏவான அன்பழகன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில், ஒவ்வொரு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் உறுதிமொழி ஏற்று எம்எல்ஏக்களாக பதவி ஏற்று கொண்டனர். இதே போல, மணவெளி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமு என்பவர் எம்எல்ஏவாக பொறுப்பேற்றார்.

மேலும் படிக்க: முடிவுக்கு வரும் கோடை விடுமுறை.. பள்ளிகள் திறப்பு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

விஜய் படத்தை காட்டியதற்கு சபாநாயகர் கடும் கண்டனம்

அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் புகைப்படத்தை காண்பித்து கடவுள் என கூறி பதவி ஏற்க முயன்றார். அப்போது, இந்த செயலுக்கு சபாநாயகர் அன்பழகன் எதிர்ப்பு தெரிவித்ததுடன், விஜய் குறித்த எம்எல்ஏவின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்குவதற்கு உத்தரவிட்டார். மேலும், நாட்டில் ஏற்கனவே 1008 கடவுள்கள் உள்ளனர். விஜய் என்ன 1009- ஆவது கடவுளா என்று கேள்வி எழுப்பியதுடன், சட்டப்பேரவையில் இதுபோன்ற யாரும் செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் விஜய்யை கடவுள் என கூறி பதவியேற்பு

தமிழகத்தில் 108 இடங்களில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர். அவர்கள் சட்டப் பேரவையில் எம்எல்ஏக்களாக உறுதி மொழி ஏற்று பதவி ஏற்றனர். அப்போது, சிலர் உறுதிமொழி ஏற்கும்போது, கடவுளை அறிய என்று அந்த வார்த்தையே கூறியதுடன், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல்வருமான விஜய்யை குறிப்பிட்டு பதவி ஏற்றனர். இதே போல, புதுச்சேரி சட்டமன்றத்திலும் எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் விழாவின்போது, தவெக எம்எல்ஏ இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: “அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் பங்குபெற வேண்டும்”.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு!!

Follow Us