AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற 7 பட்டியலின அமைச்சர்கள்.. மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் விவரம்!

TVK Cabinet SC Ministers: தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், பட்டியல் இனத்தை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற 7 பட்டியலின அமைச்சர்கள்.. மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் விவரம்!
தவெக பட்டியலின அமைச்சர்கள்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 21 May 2026 13:49 PM IST

சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் இன்று வியாழக்கிழமை ( மே 21- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் என சுமார் 23 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களோடு சேர்த்து முதல்வர் ஜோசப் விஜய் பதவி ஏற்பின் போது, அமைச்சர்களாக பதவி ஏற்றவர்களோடு சேர்த்து மொத்தம் 33 அமைச்சர்கள் தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் பதவி ஏற்றுள்ளனர். இதில், அதிக அளவிலான புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான இலாகாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பட்டியல் இன சமுதாயத்தை சேர்ந்த 7 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில்,

மேலும் படிக்க: Tamil Nadu Ministers Cabinet Expansion Full List : தமிழக அமைச்சரவையில் புதியதாக பதவி ஏற்ற 23 அமைச்சர்கள்.. யார் யார்.. பட்டியல் இதோ!

  • எழும்பூர் தொகுதி எம்எல்ஏ ராஜ்மோகன். ( பள்ளிக் கல்வித் துறை)
  • அவிநாசி தொகுதி எம்எல்ஏ கமலி. ( கால்நடைத்துறை)
  • ராசிபுரம் தொகுதி எம்எல்ஏ லோகேஷ். (பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை)
  • அரக்கோணம் தொகுதி எம்எல்ஏ காந்திராஜன். (கூட்டுறவுத்துறை)
  • ஒட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ மதன்ராஜ். ( சிறு, குரு, நடுத்தர தொழில்துறை)
  • ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ தென்னரசு. ( வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை)
  • மேலூர் பொது தொகுதி எம்எல்ஏ விசுவநாதன். ( உயர்கல்வித்துறை)

அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன்

ஆகிய 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், ராசிபுரம் எம்எல்ஏ லோகேஷ் என்பவர் அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் ஆவார். இதை தவிர்த்து, முன்பு எப்போதும் இல்லாத அளவில் கீர்த்தனா, கமலி, விஜயலட்சுமி, ஜெகதீஸ்வரி ஆகிய 4 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் முதல்வர் விஜய் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா டி நகர் தொகுதியில் ஆனந்த் மயிலாப்பூர் தொகுதியில் வெங்கட்ரமணன் எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகன் ஆர் கே நகர் தொகுதியில் மரிய வில்சன் வேளச்சேரி தொகுதியில் குமார் ஆகிய 7 அமைச்சர்கள் உள்ளனர்.

மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் விவரம்

செங்கல்பட்டில் 1 அமைச்சர், காஞ்சிபுரத்தில் 2 அமைச்சர்கள், ராணிப்பேட்டை மற்றும் சேலம் மாவட்டத்தில் தலா ஒரு அமைச்சர், நாமக்கல் மாவட்டத்தில் 3 அமைச்சர்கள் உள்ளனர். இதே போல, ஈரோடு மாவட்டத்தில் 2 அமைச்சர்கள், திருப்பூர் மாவட்டத்தில் 1 அமைச்சர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள், திருச்சி மாவட்டம், கடலூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு அமைச்சர், விருதுநகர் மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தலா 2 அமைச்சர்கள், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 1 அமைச்சர்கள் உள்ளனர். குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசு ஒப்புதலின் அடிப்படையில் தமிழக அமைச்சர்கள் எண்ணிக்கை மேலும் உயர்த்த படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: https://www.tv9tamilnews.com/tamil-nadu/tvk-royapuram-mla-raised-voice-against-police-attacking-common-people-79747.html

Follow Us