AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“பொதுமக்களை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது”.. காவல் நிலையத்தில் ராயபுரம் தவெக எம்.எல்.ஏ கடும் வாக்குவாதம்!

TVK Royapuram MLA Raised Voice | தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த காதலனுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவருடன் சென்ற நபரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

“பொதுமக்களை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது”.. காவல் நிலையத்தில் ராயபுரம் தவெக எம்.எல்.ஏ கடும் வாக்குவாதம்!
வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக எம்.எல்.ஏ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 May 2026 08:57 AM IST

சென்னை, மே 21 : காதல் விவகாரத்தில் இளம் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த பெண் உள்ளிட்ட அவருடன் சென்ற சிலரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது இளம் பெண்ணுக்கு ஆதரவாக சென்ற நபர் ஒருவரை காவலர் தாக்கிய நிலையில், காவல் நிலையம் சென்ற ராயபுரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ “பொதுமக்களை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது” என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏமாற்றிய காதலன் – தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, வேளச்சேரியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த இளைஞர் இளம் பெண்ணை காதலிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், அந்த பெண் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

இதையும் படிங்க : தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்… 6 தசாப்தங்களுக்கு பிறகு மாற்றம்.. 2 பேருக்கு அடித்தது ஜாக்பாட்!

ஜாமினில் வெளியே வந்த அந்த இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அவர்களின் திருமணம் வரவேற்பு ராயபுரத்தில் உள்ள மண்டபத்தில் நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், அந்த இளம் பெண் தனக்கு ஆதரவாக சிலரை அழைத்துக்கொண்டு மண்டபத்திற்கு சென்றுள்ளார். அங்கு அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இளம் பெண்ணை கைது செய்த போலீசார்

இது குறித்து தகவல் அறிந்த ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்ட இளம் பெண் மற்றும் அவருக்கு ஆதரவாக தர்ணாவில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, இளம் பெண்ணுக்கு ஆதரவாக வந்த கலில் அகமது என்ற நபரை போலீசார் தாக்கியுள்ளனர். அதில்,  மயங்கி விழுந்த அவர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : காவல் துறையில் அதிரடி மாற்றம்.. 15 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள்.. தமிழக அரசு உத்தரவு!

இந்த அறிந்த ராயபுரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ காவல் நிலையத்திற்கு சென்று, பொதுமக்களை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us