AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காவல் துறையில் அதிரடி மாற்றம்.. 15 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள்.. தமிழக அரசு உத்தரவு!

IPS Officers Transferred : தமிழகத்தில் வெங்கட்ராமன், பவானிஸ்வரி உள்பட 15 ஐ. பி. எஸ். அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் எந்தெந்த மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

காவல் துறையில் அதிரடி மாற்றம்.. 15 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள்.. தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 20 May 2026 18:47 PM IST

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசு துறைகளில் முக்கிய அதிகாரிகள் மற்றும் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக இருந்த ஜி. வெங்கட்ராமன் ஐபிஎஸ் தற்போது சிவில் சப்ளை சிஐடி டிஐஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி. ஜி. பி.  தலைமை அலுவலகத்தில் ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்த கே. பவானிஸ்வரி ஐ.பி.எஸ். சிங்கப் பெண்கள் சிறப்பு படையின் ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ. ஜி. அவினாஷ் குமார் ஐபிஎஸ் தமிழ்நாடு காவல்துறை தலைமையக கல்வியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிரவீன் குமார் அபிநபு ஐபிஎஸ் பணியிட மாற்றம்

இதேபோல, டி.ஜி.பி. தலைமை அலுலகத்தில் ஐஜி ஆக இருந்த பிரவீன் குமார் அபிநபு வடக்கு மண்டல ஐ. ஜி. யாகவும், சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக சரவண சுந்தர் சேலம் சரக டிஐஜியாக ஜெ மகேஷ் சென்னை மாநகர சட்டமூலங்கு இணை ஆணையராக பி விஜயகுமார் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நீலகிரி காவல் கண்காணிப்பாளராக எஸ். பிருந்தா கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அரவிந்த் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: ‘வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியும், இன்ஸ்டாகிராம் அட்வைஸும்’.. கனிமொழி எம்.பி கொடுத்த பகுத்தறிவு டோஸ்!

குடிமை பொருள் வழங்கல் துறை டிஜிபி

அதேபோல, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரவீந்திர குமார், கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த கார்த்திகேயன் தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், பொறுப்பு டிஜிபி ஆக இருந்த வெங்கட்ராமன் குடிமை பொருள் வழங்கல் துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் புதிதாக ஆட்சி அமைத்தது முதல் தற்போது வரை அரசு துறைகளில் பல்வேறு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

முதல்வரின் தனி செயலர் முதல் அனைவரும் மாற்றம்

அந்த வகையில், முதல்வரின் தனி செயலாளர்கள் 4 பெயர் மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், தலைமைச் செயலாளர், உளவுத்துறை ஐஜி, உளவுத்துறை டிஜிபி, பல்வேறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இந்த பணியிடங்களுக்கு வேறு உயர் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். அந்த வகையில், தற்போது மேலும் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரூ.2.90 கோடியில் 40 புதிய வாகனங்கள்.. காரை ஓட்டிப்பார்த்த முதல்வர் விஜய்.. வைரலாகும் காட்சி..

Follow Us