முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் இலாக்காவில் மாற்றம்.. கை மாறிய துறைகள்.. யாருக்கு என்ன?
Ministerial Portfolios Departments: தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வரலாற்றில் மிக முக்கிய மாற்றமாக, முதன்முறையாக "செயற்கை நுண்ணறிவுத் துறை" (Artificial Intelligence - AI) உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய செயற்கை நுண்ணறிவுத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் (IT) அமைச்சராக குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள 23 அமைச்சர்களுக்கும், முதலமைச்சர் ஜோசப் விஜயின் பரிந்துரையின் பேரில் இலாகாக்களை ஒதுக்கி ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் உட்பட 10 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய அமைச்சர்களுக்கான துறைகளும், ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த சிலரின் துறைகளிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முதலமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்களின் துறையும் மாற்றப்பட்டுள்ளது. இதுபற்றிய முழு விவரத்தை இக்கட்டுரையில் அறியலாம்.
இதையும் படிக்க : விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு.. அவர்கள் யார்.. யார்.. தெரியுமா!
அமைச்சரவையில் மிக முக்கிய மாற்றம்:
இந்த புதிய அறிவிப்பின்படி, முதலமைச்சர் ஜோசப் விஜயிடமிருந்த மகளிர் நலத்துறை மாற்றப்பட்டு, அமைச்சர் ஜெகதீஸ்வரி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைச்சரான ஆனந்திடமிருந்த வறுமை ஒழிப்புத் துறை தற்போது முதலமைச்சர் வசம் மாற்றப்பட்டுள்ளது. மிக முக்கிய மாற்றமாக, அமைச்சர் செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை அவரிடமிருந்து மாற்றப்பட்டு, புதிய அமைச்சர் மரிய இல்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனுக்கு தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் நிர்மல் குமாரிடம் இருந்த சட்டமன்ற விவகாரங்கள் துறை, தற்போது செங்கோட்டையன் வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக உருவாக்கப்பட்ட துறை:
தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வரலாற்றில் மிக முக்கிய மாற்றமாக, முதன்முறையாக “செயற்கை நுண்ணறிவுத் துறை” (Artificial Intelligence – AI) உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய செயற்கை நுண்ணறிவுத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் (IT) அமைச்சராக குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அமைச்சர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாக்காக்களையும் அறியலாம்.
மரிய வில்சன் – நிதித்துறை
செங்கோட்டையன் – வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் துறை
ஜெகதீஸ்வரி – சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை
ஸ்ரீநாத் (முதலமைச்சரின் நண்பர்) – மீன்வளத்துறை
கமலி (அவிநாசி தொகுதி) – கால்நடை பராமரிப்பு துறை
விஜயலட்சுமி – பால்வளத்துறை
ரஞ்சித் குமார் – வனத்துறை
வினோத் – வேளாண் துறை
ராஜீவ் – சுற்றுச்சூழல் துறை
ராஜ்குமார் – வீட்டு வசதி துறை
காந்திராஜ் – கூட்டுறவுத் துறை
மதன் ராஜா – சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறை
விஜய் பாலாஜி – கைத்தறித் துறை
லோகேஷ் தமிழ்ச்செல்வன் – வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை
விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்துத் துறை
ரமேஷ் – இந்து சமய அறநிலையத் துறை
சரத்குமார் – மனிதவள மேம்பாட்டுத் துறை
விக்னேஷ் – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
கூட்டணிப் பங்கீடு (காங்கிரஸ் அமைச்சர்கள்):
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கும் இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ராஜேஷ் குமார் – சுற்றுலாத் துறை
விஸ்வநாத் – உயர்கல்வித் துறை
நலத்துறை அமைச்சர்கள்:
தென்னரசு – அயலக தமிழர் நலத்துறை
தம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
முகமது பர்வேஸ் – தொழிலாளர் நலத்துறை
மேலும் படிக்க: சீர்வரிசை வழங்குவதில் தகராறு.. மதுரையில் மருமகன் அடித்து கொலை.. தாய்மாமன் அதிரடி கைது!