அசுரன் கதாசிரியர் பூமணி காலமானார்.. அவருக்கு வயது 79!
Writer Poomani Passed Away At 79 | சாகத்ய அகாடமி விருந்து பெற்ற எழுத்தாளர் பூமணி உடல்நல குறைவு காரணமாக நேற்று (ஜூலை 12, 2026) சென்னையில் காலமானார். அவரது இறுதி சடங்கு சொந்த ஊரான கோவில்பட்டியில் இன்று (ஜூலை 13, 2026) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
சென்னை, ஜூலை 13 : வெற்றி மாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தின் கதாசிரியர் பூமணி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79. உடல்நல குறைவு காரணமாக நேற்று (ஜுலை 12, 2026) இரவு 11 மணி அளவில் அவர் காலமான நிலையில், அவரது இறுதி சடங்கு கோவில்பட்டியில் இன்று (ஜூலை 13, 2026) நடைபெற உள்ளது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசுரன் திரைப்படத்தின் கதாசிரியர் பூமணி
தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தவர் பூமணி. இவரது வெக்கை எனும் நாவலை தழுவி தான் இயக்குநர் வெற்றிமானறன் அசுரன் திரைப்படத்தை இயக்கினார். நடிகர்கள் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்த இந்த திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் பூமணிக்கு மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரத்தையும் இந்த திரைப்படம் வாங்கி கொடுத்தது.
இதையும் படிங்க : நாங்கள் திமுகவுடன் நட்போடு தான் இருக்கிறோம் – அமைச்சர் வன்னி அரசு விளக்கம்
கருவேலம்பூக்கள் திரைப்படத்தை இயக்கிய பூமணி
பூமணி எழுத்தாளர் மட்டுமன்றி, திரைப்பட இயக்குநராகவும் இருந்துள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு கருவேலம்பூக்கம் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது. சிறந்த எழுத்தாற்றல் கொண்ட பூமணி, சாகத்ய அகாதமி மட்டுமன்றி இலக்கிய சிந்தனை பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ் சங்க விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இதையும் படிங்க : கோவிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப மரணம்
இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இறுதி சடங்கு
கோவில்பட்டியை சேர்ந்தவர் பூமணி. அவர் சென்னையில் நேற்று உயிரிழந்த நிலையில், அவரது உடல் சொந்த ஊரான கோவில்பட்டிக்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்கு நடைபெற உள்ளது. கோவில்பட்டி, பாரதி நகர், மேட்டுத் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் மாலை 4 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமணியின் மறைவு மிகப்பெரிய இழப்பாக உள்ள நிலையில், தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



