தவெக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல்.. பதவியேற்ற வன்னியரசு, ஷாஜகான்!!
அதன் அடிப்படையில், முதற்கட்டமாக மே 10-ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் உட்பட 10 பேர் பதவியேற்றனர். தொடர்ந்து, நேற்று (மே 21) மேலும் 23 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். தமிழகச் சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையின்படி (234 தொகுதிகள்) முதலமைச்சர் உட்பட அதிகபட்சமாக 35 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கலாம்.
தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷாஜகான் ஆகியோர் இன்று புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற இருவருக்கும் தமிழக ஆளுநர் அர்லேகர் முறைப்படி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையும் படிக்க: முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் இலாக்காவில் மாற்றம்.. கை மாறிய துறைகள்.. யாருக்கு என்ன?
கூட்டணி ஆட்சிக்கான கோரிக்கை:
நடந்து முடிந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப் பெரும்பான்மை பெறாத சூழலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது . இதனால் தங்களுக்கு ஆதரவளித்த கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக முன்வைக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், முதற்கட்டமாக மே 10-ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் உட்பட 10 பேர் பதவியேற்றனர். தொடர்ந்து, நேற்று (மே 21) மேலும் 23 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். தமிழகச் சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையின்படி (234 தொகுதிகள்) முதலமைச்சர் உட்பட அதிகபட்சமாக 35 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கலாம். ஏற்கனவே காங்கிரஸைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்படவுள்ள முக்கிய இலாக்காக்கள்:
நேற்று பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டபோது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய இரண்டு முக்கிய துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
எனவே, இன்று அமைச்சர்களாகப் பதவியேற்ற வன்னி அரசு மற்றும் ஷாஜகான் ஆகிய இருவருக்கும் இந்தத் துறைகளே ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் பதவியேற்ற நிலையில், இவர்களுக்கான அதிகாரப்பூர்வ இலாக்காக்கள் குறித்த அறிவிப்பை ஆளுநர் மாளிகை சற்றுநேரத்தில் முறைப்படி வெளியிடும்.
பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து:
கடும் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, மீண்டும் வந்தே மாதரத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. நேற்று நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது. முன்னதாக, முதல்வர் விஜய் பதவியேற்ற போதும், தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது.
இதையும் படிக்க: முதல்வர் விஜய்யின் ஆலோசகராக ஜான் ஆரோக்கிய சாமி – விஷ்ணு ரெட்டி நியமனம்?