AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : ஒரே நாளில் ரூ.800 சரிந்த தங்கம்.. இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold Price Reduced 800 Rupees Per Sovereign | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஜூலை 13, 2026) சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : ஒரே நாளில் ரூ.800 சரிந்த தங்கம்.. இன்றைய விலை நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Jul 2026 10:47 AM IST

சென்னை, ஜூலை 13 : தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை (Gold Price), இன்று (ஜூலை 13, 2026) சரிவை சந்தித்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களில் தங்கம் விலை

ஈரான் போர் காரணமாக கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம், ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் கடும் சரிவை சந்திக்க தொடங்கியது. அதாவது, ஜனவரி மாதம் ரூ.15,000-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் ஜூன் மாதத்தில் ரூ.13,000 என்ற அளவில் குறைந்தது.

இதையும் படிங்க : இனி வாட்ஸ்அப் காபி, ஸ்கிரீன்ஷாட் ஆகியவை செல்லாது.. பயணிகளுக்கு இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு!

ஆனால், தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இருந்த அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை மீண்டும் ஏற்ற, இறக்கங்களை சந்திக்க தொடங்கியுள்ளது.

இன்றைய தங்கம் , வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,200-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us