வார இறுதி நாளில் குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
வரும் நாட்களிலும் தங்கத்தின் விலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றும், தற்போதைய நிலையே தொடரும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம், உலகப் பொருளாதாரத்தில் காணப்படும் சீரற்ற நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜூலை 11, 2026: தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்றைய தினம் கடுமையான உயர்வைச் சந்தித்த நிலையில், இன்று சற்று சரிவைக் கண்டுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்துள்ள நிலையில், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்துள்ளது. நேற்று தங்கம் மற்றும் வெள்ளி விலை, கிட்டத்தட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு கணிசமான உயர்வைச் சந்தித்தது. இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணிசமாக குறைந்த தங்கம் விலை:
ஜூலை 10-ஆம் தேதியான நேற்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்தது. அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்தச் சூழலில், ஜூலை 11-ஆம் தேதியான இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து, ரூ.13,300-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: கடும் உயர்வை சந்தித்த கச்சா எண்ணெய்.. பெட்ரோல், டீசல் விலையில் தாக்கம் ஏற்படுமா?
அதேபோல், 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.14,590-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையைப் பொறுத்தவரை, ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சீரற்ற நிலைக்கு என்ன காரணம்?
கடந்த ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை கணிசமான சரிவைக் கண்டு வருகிறது. அதற்கு முன்பு, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.15,000-ஐக் கடந்த நிலையில் இருந்தது. தற்போது அது ரூ.13,300 ஆகக் குறைந்துள்ளது.
மேலும் படிக்க: இனி பத்திரப்பதிவு செய்ய அலைய வேண்டாம்.. வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமே செய்யலாம்.. விரைவில் அமலுக்கு வருது!