கோட்டையை ஆளும் தவெக கூட்டணி அரசு.. “அமைச்சர்கள் மற்றும் இலாகாக்கள்” முழு விவரம்!
Tamil Nadu Ministers And Portfolios Details : தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள 35 அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலாகாக்கள் குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் .
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தில் 35 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். இதில், தவெக – 31, காங்கிரஸ் – 2, விசிக – 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 1 அமைச்சர்கள் ஆவர். இவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், எந்தெந்த அமைச்சர்களுக்கு என்னென்ன இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: விசிக வன்னி அரசு – ஐயூஎம்எல் ஷாஜகானுக்கு துறைகள் ஒதுக்கீடு!
- முதல்வர் சி. ஜோசப் விஜய் ( பெரம்பூர்) – பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர், உள்துறை, காவல், சிறப்பு திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்.
- என். ஆனந்த் ( டி நகர்)- ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை.
- கே. ஏ. செங்கோட்டையன் ( கோபிசெட்டிபாளையம்) – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை.
- ஆதவ் அர்ஜுனா ( வில்லிவாக்கம்) – பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை.
- அருண்ராஜ் ( திருச்செங்கோடு) – மக்கள் நல்வாழ்வு துறை.
- வெங்கட்ரமணன் ( மயிலாப்பூர்) – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை.
- சி.டி.ஆர். நிர்மல் குமார் ( திருப்பரங்குன்றம்)- எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டம்.
- ராஜ்மோகன் ( எழும்பூர்)- பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பர துறை.
- பிரபு ( காரைக்குடி) – இயற்கை வளங்கள்.
- கீர்த்தனா ( சிவகாசி)- தொழில் துறை.
- ஸ்ரீநாத் ( தூத்துக்குடி)- மீன்வளத்துறை.
- கமலி ( அவிநாசி)- கால்நடை வளர்ச்சித்துறை.
- விஜயலட்சுமி ( குமாரபாளையம்)- பால்வளத்துறை.
- ரஞ்சித் குமார் ( காஞ்சிபுரம்)- வனத்துறை.
- வினோத் ( கும்பகோணம்)- வேளாண் மற்றும் உழவர் நலத்துறை.
- ராஜீவ் ( திருவாடானை)- சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரியம், காலநிலை மாற்ற துறை.
- ராஜ்குமார் ( கடலூர்)- வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை.
- காந்தி ராஜ் ( அரக்கோணம்)- கூட்டுறவுத்துறை.
- மதன் ராஜா ( ஒட்டப்பிடாரம்)- சிறு, குறு, நடுத்தர தொழில் துறை.
- ஜெகதீஸ்வரி ( ராஜபாளையம்)- சமூக நலத்துறை, மகளிர் மேம்பாட்டு துறை.
- ராஜேஷ் குமார் ( கிள்ளியூர்)- சுற்றுலாத்துறை.
- விஜய் பாலாஜி ( ஈரோடு கிழக்கு) – கைத்தறி, துணி நூல், கதர் துறை.
- லோகேஷ் தமிழ்ச்செல்வன் ( ராசிபுரம்)- வணிகவரி, பத்திரப்பதிவு துறை.
- விஜய் தமிழன் பார்த்திபன் ( சேலம் தெற்கு)- போக்குவரத்து துறை.
- ரமேஷ் ( ஸ்ரீரங்கம்)- இந்து சமய அறநிலையத்துறை.
- விஸ்வநாதன் ( மேலூர்)- உயர் கல்வித்துறை.
- குமார் ( வேளச்சேரி)- செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவை துறை.
- தென்னரசு ( ஸ்ரீ பெரும்புதூர்)- வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை.
- சம்பத்குமார் ( கோவை வடக்கு)- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.
- முகமது பர்வாஸ் ( அறந்தாங்கி)- தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை.
- சரத்குமார் ( தாம்பரம்)- மனிதவள மேம்பாட்டு துறை.
- மரிய வில்சன் ( டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) – நிதி, திட்ட, மேம்பாட்டு துறை.
- விக்னேஷ் ( கிணத்துக்கடவு)- மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை.
- வன்னி அரசு ( திண்டிவனம்) – ஆதிதிராவிடர் நலத்துறை.
- ஷாஜகான் ( பாபநாசம்)- சிறுபான்மையினர் நலத்துறை.
ஆகிய 35 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.




மேலும் படிக்க: தவெகவினர் எல்லை மீறக்கூடாது.. அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது.. பொதுச் செயலாளர் ஆனந்த் திடீர் எச்சரிக்கை!