AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாதது ஏன்? முதல்வர் விஜய்யிடம் அறிக்கை கேட்ட ஆளுநர் அர்லேகர்..

Tiruparankundram Deepam Issue: தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்றும், உத்தரவு நிறைவேற்றப்படாததற்கான காரணம் என்ன என்றும் முதலமைச்சர் விஜயிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாதது ஏன்? முதல்வர் விஜய்யிடம் அறிக்கை கேட்ட ஆளுநர் அர்லேகர்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Nov 2026 20:33 PM IST

நவம்பர் 25, 2026: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு நிறைவேற்றப்படாதது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் விஜயிடம் தமிழக ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்த ஆண்டு தீபம் ஏற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போது அந்த முயற்சி நிறைவேறவில்லை.

இதற்கிடையே, நடப்பாண்டு கார்த்திகை தீபத் திருநாளன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வும் அந்த உத்தரவைச் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

வழக்கமான இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றம்

இதனால், நவம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் பூச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

மேலும் படிக்க: ரூ.842 கோடியில் புதுப்பிக்கப்படும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம்! விமான நிலையத்திற்கு இணையான நவீன வசதிகள்..

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மலை அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் ஆட்சியர் மன்னிப்பு கேட்டு அறிக்கை

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஏன் நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா 17 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்து மன்னிப்புக் கோரினார். அதில், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க: தமிழகம் முழுவதும் நூலக புத்தகங்கள் கொள்முதலில் முறைகேடா? விசாரணைக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரி வெங்கடரமனை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

ஆளுநர் கேட்டுள்ள விளக்கம் என்ன?

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்றும், உத்தரவு நிறைவேற்றப்படாததற்கான காரணம் என்ன என்றும் முதலமைச்சர் விஜயிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் சாசனத்தின் 167-வது பிரிவின்படி முதலமைச்சரிடம் விளக்கம் பெற வேண்டும் என ஆளுநரிடம் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கிடையே, தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us