AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Vaibhav Sooryavanshi: வைபவ் சூர்யவன்ஷியின் மிரளவைத்த 204 ரன்கள்.. ஐஸ்லாந்து கிரிக்கெட் போட்ட போஸ்ட் வைரல்!

Asia Cup Rising Stars: 15 வயதான அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டார்ஸ் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக 53 பந்துகளில் 204 ரன்கள் குவித்து உலகையே வியக்க வைத்தார். அவரது ருத்ரதாண்டவ ஆட்டம், 28 சிக்ஸர்களுடன் ஒரு புதிய சாதனையைப் படைத்தது. என்விடியா AI சிப்களுடன் ஒப்பிட்டு ஐஸ்லாந்து கிரிக்கெட் பாராட்டியது. விரேந்தர் சேவாக் "நம்பமுடியாத ஆட்டம்" என வியந்தார்.

Vaibhav Sooryavanshi: வைபவ் சூர்யவன்ஷியின் மிரளவைத்த 204 ரன்கள்.. ஐஸ்லாந்து கிரிக்கெட் போட்ட போஸ்ட் வைரல்!
வைபவ் சூர்யவன்ஷி - ஐஸ்லாந்து கிரிக்கெட்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Nov 2026 20:50 PM IST

15 வயதான அதிரடி இந்திய தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் (Vaibhav Sooryavanshi) வரலாற்று சிறப்புமிக்க மற்றும் அதிரடியான ஆட்டத்தை உலகமே பாராட்டி வருகிறது. ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டார்ஸில் (Asia Cup Rising Stars) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி 53 பந்துகளில் 204 குவித்து அசத்தினார். இது தொடர்பாக ஐஸ்லாந்து கிரிக்கெட் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு என்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில், என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கை இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் ஒப்பிட்டு குறிப்பிட்டிருந்தது.

ALSO READ: வெறும் 52 பந்துகளில் இரட்டை சதம்.. UAEக்கு எதிராக அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

ஐஸ்லாந்து கிரிக்கெட் பதிவு:

வைரலான அந்த பதிவில், ஐஸ்லாந்து கிரிக்கெட், ஹுவாங் மீண்டும் என்விடியா தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரும்பியதற்கும் சூர்யவன்ஷியின் சிறப்பான ஆட்டத்திற்கும் இடையே உள்ள தற்செயல் நிகழ்வைச் சுட்டிக்காட்டி, இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பேட்டை அந்நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சிப்களால் இயக்கப்பட்டிருக்கலாம் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தது.

விரேந்தர் சேவாக் வைரல் போஸ்ட்:

“53 பந்துகளில் 204 ரன்கள். 28 சிக்ஸர்கள்! ஈஏ ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்டில் கூட, இது நம்ப முடியாததாக இருந்திருக்கும்,” என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் இன்று அதாவது 2026 நவம்பர் 25ம் தேதி ட்வீட் செய்திருந்தார்.

ALSO READ: ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டார்ஸ்.. அரையிறுதியில் மோதும் இந்தியா ஏ vs இலங்கை ஏ!

ருத்ர தாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி:

ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் அரைசதத்தையும், 28 பந்துகளில் சதத்தையும், 52 பந்துகளில் இரட்டை சதத்தையும் அடித்தார். இந்த இன்னிங்ஸ் வைபவ் மொத்தமாக 7 பவுண்டரிகளையும், 28 சிக்ஸர்களையும் பறக்கவிட்டிருந்தார். இதன் காரணமாக, 250 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை வெறும் 14.2 ஓவர்களில் விரட்டிப் பிடித்து அரையிறுதிக்கு திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ அணி முன்னேறியது.

Follow Us