AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோட்டை டூ டெல்லி.. முதல்வர் விஜய் 3 நாள்கள் பயணம்.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு?

CM Vijay Visit Delhi: தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோட்டை டூ டெல்லி.. முதல்வர் விஜய் 3 நாள்கள் பயணம்.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு?
பிரதமர் மோடி - முதல்வர் விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 22 May 2026 12:03 PM IST

தமிழகத்தின் முதல் அமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மே 10- ஆம் தேதி பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரை சந்திக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி, தமிழகத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து இருந்தார். இந்த நிலையில், புதுடில்லியில் பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரை விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், முதல்வர் ஜோசப் விஜய் 3 நாட்கள் பயணமாக நாளை சனிக்கிழமை ( மே 23- ஆம் தேதி) டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயணத்தின் போது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட சில முக்கிய அமைச்சர்கள் ஆகியோரை சந்திக்க உள்ளாராம்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுடன் விஜய் சந்திப்பு

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் தமிழகத்துக்கான நிதி உள்ளிட்டவை குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரையும் முதல்வர் விஜய் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் விஜய் டெல்லி செல்ல உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் முதல்வர் விஜய் தங்குவதற்கான அறை, ஆலோசனை அரங்கம் உள்ளிட்டவற்றை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: அமைச்சர் தரிசனத்தில் ஆகம விதி மீறப்பட்டதா? திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் நீதிமன்றம் விளக்கம் கேட்பு!

டெல்லியில் தமிழர் பாரம்பரிய முறையில் வரவேற்பு

மேலும், தமிழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி செல்ல உள்ள நிலையில், அங்கு அவருக்கு தமிழர் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக தமிழகத்தின் அரசு அதிகாரிகள் சிலர் டெல்லி சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் தலைவர்களை சந்தித்து வரும் விஜய்

தமிழகத்தின் முதல்வராக விஜய் பதவியேற்ற நாளில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி, முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர் சண்முகம், வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரை விஜய் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்.. சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா!

Follow Us