AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்.. சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா!

Tamil Nadu Toll Fees Increase: தமிழகத்தில் நாளை மே 23- முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 2- ஆவது முறையாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்.. சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா!
தமிழகத்தில் மீண்டும் சுங்க கட்ணம் உயர்கிறதுImage Source: pinrest
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 May 2026 09:27 AM IST

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலமாக பல்வேறு சுங்கச் சாவடிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சுங்க சாவடிகளில் நாளை சனிக்கிழமை ( மே 23- ஆம் தேதி) முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாற்றி அமைக்கப்பட்ட புதிய சுங்க கட்டணமானது ரூ.25 முதல் ரூ..100 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுங்க கட்டண உயர்வானது நாளை சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக சென்னை புறவழி சாலை மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் சுங்க சாவடிகளில் இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், கார்கள், ஜீப்கள், வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் என அனைத்து தரப்பு வாகனங்களுக்கும் இந்த கட்டணம் உயர்வானது அறிவிக்கப்பட்டுள்ளது.

60- க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு

குறிப்பாக கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி சென்னையில் செயல்பட்டு வரும் முக்கிய சுங்க சாவடிகளான வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட 60-க்கும் சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் சுங்க கட்டணம் ஆனது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்க கட்டண உயர்வானது அனைத்து தரப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் இலாக்காவில் மாற்றம்.. கை மாறிய துறைகள்.. யாருக்கு என்ன?

மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்வு

இதில், சென்னை புறவழிச் சாலையில் செயல்பட்டு வரும் வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கார் மற்றும் ஜீப் ஆகிய வாகனங்களுக்கு கடந்த முறை நாள் ஒன்றுக்கு ரூ.55 சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தது வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த சுங்க கட்டணம் ரூ.80- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல, மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.1,805- ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலகு ரக வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூ.85- இல் இருந்து ரூ.130- ஆகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.2,915- ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இலகு ரக வாகனங்கள் கட்டணம்

இதை தவிர்த்து, பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு ரூ.185- இல் இருந்து ரூ.275 ஆக சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சூரப்பட்டு சுங்க சாவடியில் நாள் ஒன்றுக்கு ரூ.75- இல் இருந்து ரூ.115- ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமும் ரூ.2,505- ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலகு ரக வாகனங்களுக்கு ரூ.120- இல் இருந்து ரூ.180- ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அமைச்சர் தரிசனத்தில் ஆகம விதி மீறப்பட்டதா? திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் நீதிமன்றம் விளக்கம் கேட்பு!

Follow Us