மொஹரம் பண்டிகை தொடர் விடுமுறை – சிறப்பு பேருந்துகளை அறிவித்த தமிழ்நாடு அரசு
மொஹரம் பண்டிகை தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25, 2026 முதல் ஜூன் 28, 2026 வரை 4 நாட்கள் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொஹரம் மற்றும் வார இறுதி தொடர் விடுமுறைகள் வருவதை முன்னிட்டு சென்னையிலிருந்து பல நகரங்களுக்கு நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மொஹரம் பண்டிகை தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25, 2026 முதல் ஜூன் 28, 2026 வரை 4 நாட்கள் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகளை அறிவித்த தமிழ்நாடு அரசு
இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகிற ஜூன் 25, 2026 வியாழக்கிழமை, மொஹரம் பண்டிகை தினமான ஜூன் 26 2026 வெள்ளிக்கிழமை, ஜூன் 27, 2026 சனிக்கிழமை மற்றும் ஜூன் 28தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 25 முதல் 27ஆம் தேதி வரை சென்னையிலிருந்தும் மற்றும் மாநிலத்தின் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 25ஆம் தேதி வியாழக்கிழமை அன்று 525 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து ஜூன் 26, 2026 வெள்ளிக்கிழமை மற்றும் ஜூன் 27, 2026 சனிக்கிழமை 315 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஜூன் 25, 2026 அன்று 85 பேருந்துகளும்,ஜூன் 26 மற்றும் 27, 2026 ஆகிய நாட்களில் 75 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து ஜூன் 25ஆம் தேதி முதல் 27 , 2026 வரை தலா 14 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஜூன் 28, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 615 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் ஜூன் 25, 2026 வியாழக்கிழமை அன்று 12,445 பயணிகளும் ஜூன் 26, 2026 வெள்ளிக்கிழமை அன்று 5,846 பயணிகளும் ஜூன் 27, 2026 சனிக்கிழமை அன்று 3,815 பயணிகளும் மற்றும் ஜூன் 28, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 12,642 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
முன்பதிவு விவரம்
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Official Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.