AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மழை..!

Chief Minister Vijay birthday : தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை யொட்டி, சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ராஜ்மோகன் ஆகியோர் தங்க மோதிரம் அணிவித்து பிறந்த நாள் விழாவை கொண்டாடினர் .

முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மழை..!
முதல்வர் பிறந்த நாளில் தங்க மழையில் நனைந்த குழந்தைகள்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Jun 2026 21:54 PM IST

தமிழகத்தின் 13- ஆவது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கடந்த மே 10- ஆம் தேதி பதவி ஏற்றார். அதன்படி, முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா இன்று திங்கள்கிழமை ( ஜூன் 22- ஆம் தேதி) கொண்டாடப்பட்டது. இவர், முதல்வராக பதவியேற்று வருகிற முதல் பிறந்தநாள் விழா இதுவாகும். இன்று காலை தொடங்கிய சட்டப்பேரவை நிகழ்வில் முதல்வர் விஜய் பங்கேற்றபோது சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல, தமிழக வெற்றி கழக கட்சியினர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் முதல்வர் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடினர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற முதல்வர் பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், உணவுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், முதல்வர் விஜயின் 52- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 52 அடி நீளமான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

விஜய் பிறந்தநாள் விழாவில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

இந்த நிலையில், சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் இன்று திங்கள்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு, தமிழக வெற்றி கழகம் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் தங்க மோதிரம் அணிவித்தனர். விஜய் முதல்வராக பதவியேற்று வருகிற முதல் பிறந்தநாள் என்பதால், இந்த பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு கட்சியினர் திட்டமிட்டனர்.

மேலும் படிக்க: பவர் ஷேரிங் கொடுத்த தவெக ஆட்சியில் பவர் இல்லை.. உதயநிதி பேச்சால் சிரிப்பலை!

ரத்த தான முகாம் உடல் தான பதிவு முகாம்

அதன்படி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரத்த தான முகாம்கள், உடல் தான பதிவு முகாம்கள், ஏழை, எளியவர்கள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், மாணவ, மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள், பேனாக்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.  அதன்படி, சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் பிறந்த நாள் என்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

பல்வேறு இடங்களில் முதல்வர் விஜய் பிறந்த நாள் விழா

இதே போல, தமிழக சட்டப்பேரவையிலும் முதல்வர் விஜய் பிறந்தநாளை அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கேக் வெட்டி விமரிசையாக கொண்டாடினர். இதே போல, முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளில் தனது குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பிய தவெக பெண் எம்எல்ஏ பல்லவியின் ஆண் குழந்தைக்கு விஜய் டிவிகே என பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தவெக ஆட்சியிலும் ஹிந்துக்கள் மீதான விரோதம் தொடர்கிறது.. நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

Follow Us