AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

” மனமுடைந்து கதறி அழுத வைகோ”.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம் செய்யப்பட்டது – துரை வைகோ ஓபன் டாக்..

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய துரை வைகோ, சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மதிமுகவுக்கு மட்டுமல்லாமல், கூட்டணியில் இருந்த பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் இதேபோன்ற அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

” மனமுடைந்து கதறி அழுத வைகோ”.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம் செய்யப்பட்டது – துரை வைகோ ஓபன் டாக்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Jun 2026 20:52 PM IST

ஜூன் 22, 2026: திமுக சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நிர்பந்தம் செய்யப்பட்டதாக மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், முதலில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், ஒரு தொகுதியில் மட்டும் மதிமுகவின் சொந்த சின்னமான பம்பரம் சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் நெருங்கிய நிலையில் நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டதாக மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திமுகவில் இருந்து விலகும் மதிமுக:

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுகவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அது குறைக்கப்பட்டு நான்கு தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டன. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்பட்டது.

இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாக மதிமுக திமுக கூட்டணியில் இருந்து விலக உள்ளதாகவும், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ஆகியோர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்ததும் அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்தது.

மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ பல்லவி ஆண் குழந்தைக்கு “டிவிகே” என பெயர்… முதல்வர் ஜோசப் விஜய் சூட்டினார்!

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அழுத்தம் கொடுக்கப்பட்டது:

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய துரை வைகோ, சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மதிமுகவுக்கு மட்டுமல்லாமல், கூட்டணியில் இருந்த பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் இதேபோன்ற அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இதேபோன்ற அழுத்தம் இருந்ததாகக் கூறிய அவர், “நான் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என உறுதியாக இருந்ததால், கட்சியின் அங்கீகாரம் பாதுகாக்கப்பட்டது” என்றார்.

கதறி அழுத வைகோ – துரை வைகோ வேதனை:

கடந்த பத்து ஆண்டுகளாக திமுக கூட்டணியில் மதிமுக இருந்து வரும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு வெறும் 15 முதல் 20 நாட்கள் மட்டுமே இருந்த சூழலில் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது கூட்டணியில் இருந்து வெளியேற முடியாத நிலை இருந்ததால், வேறு வழியின்றி நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாக கூறினார்.

மேலும், இந்த விவகாரத்தால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மிகவும் மனவேதனை அடைந்ததாகவும், ஒரு கட்டத்தில் மனமுடைந்து கதறி அழுததாகவும் துரை வைகோ தனது பேட்டியில் தெரிவித்தார்.

Follow Us