ஆசிரியர் தேர்வு வாரிய மோசடி: 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு மோசடி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஜூன் 23, 2026 இன்று காலை 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 23 : கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு மோசடி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஜூன் 23, 2026 இன்று காலை 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு 1058 அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியதில் குளறுபடி நடந்ததாக எழுந்த புகாரில் 156 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் 18 இடங்களில் அமலகாக்கத்துறை அதிகாரிகள் ஜூன் 23, 2026 இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.




இதையும் படிக்க : திருச்செந்தூர் கோயிலில் சேவைக் கட்டணம் உயர்த்த முடிவு – எவ்வளவு தெரியுமா?
ஆசிரியர் தேர்வு வாரிய மோசடி
ED is conducting raids at about 18 premises at Chennai, Trichy, Coimbatore, Madurai in Teacher Recruitment Exam manipulation case on the basis of FIR in the year 2017 by Central Crime Branch chargesheet filed by police in 2021. Further investigation is under progress: Officials
— ANI (@ANI) June 23, 2026
1058 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்காக தேர்வு நடத்தப்பட்ட நிலையில் அதில் மோசடி நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் பெயரில் அமலாக்கத்துறை இந்த சோதனை நடத்தி வருகிறது. இந்த புகாரில் இதுவரை 156 பேர் மீது மத்திய குற்றப்பரிவு வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2021 ஆம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய்பட்டது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க : ” மனமுடைந்து கதறி அழுத வைகோ”.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம் செய்யப்பட்டது – துரை வைகோ ஓபன் டாக்..
கடந்த 2017-18ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அந்த தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து புதிய தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த ஆசிரியர் தேர்வு வாரிய ஊழலில் கோடிக்கணக்கில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) முறைகேடுகள் நடந்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு, சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது சோதனையை அதிகாலை முதலே தீவிரப்படுத்தியுள்ளனர்.