’ஒரு ஆக்ஷன் செஞ்சுக்கிறேன்’ – சட்டப்பேரவையில் ஆக்ஷன் செய்து உரையை முடித்த முதல்வர் விஜய்!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான ஜூன் 23, 2026 இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலளித்து பேசினார். கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழந்தது பெரும் வேதனையளிக்கிறது என்று முதல்வர் விஜய் பேசினார்.
சென்னை, ஜூன் 23 : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான ஜூன் 23, 2026 இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலளித்து பேசினார். கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழந்தது பெரும் வேதனையளிக்கிறது. அது என்றும் மாறாது. கரூர் மரணங்களுக்கு என் மீது பழி போட்டனர் என்றார். உரையை முடித்தபோது ஒரு ஆக்ஷன் செஞ்சுக்கிறேன் என ஸ்டைலில் உரையை முடித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், புதிதாக ஒரு வெப்பன் கொண்டுவந்துள்ளார்கள். அவங்க தயவால்தான் நம்ம ஆட்சி நடக்கிறதாம். மக்கள் தயவால் இந்த ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் அனுப்பி வைத்தால், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? மனசாட்சி உள்ள சக்திகளோட ஆதரவால் இந்த ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. தவெக ஆட்சியில் பட்டியலினத்தவர் 8 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஊழலில் ஊறிப்போனவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரமாட்டார்கள். நிதி நிலை சரியில்லாததால் தான் ஆட்சி அமைந்ததும் அவகாசம் கேட்டேன் என்றார்.




இதையும் படிக்க : மொஹரம் பண்டிகை தொடர் விடுமுறை – சிறப்பு பேருந்துகளை அறிவித்த தமிழ்நாடு அரசு
ஆக்ஷன் செய்து உரையை முடித்த முதல்வர் விஜய்!
Podu mass thalaivaa …#CMJosephVijay #Vijay #CMVijay@TVKVijayHQ @CMOTamilnadu#Vijay #ThalapathyVijay #Thalpathy #TVKVijay #TVK #TVKVijayHQpic.twitter.com/fp84dRMFZK
— ONLINE TRENDING NEWS (@OnlineNews32) June 23, 2026
சட்டம் ஒழுங்கு குறித்து யார் கருத்து தெரிவித்தாலும் காது கொடுப்போம். இது மன்னர் ஆட்சி அல்ல, மனசாட்சி உள்ள மக்களாட்சி. போதைப்பொருள் நடமாட்டத்தை ஆரம்பத்திலேயே தடுக்க தவறியது யார்?. போதைப்பொருள் நடமாட்டம் தாறுமாறாக உள்ளது. கடந்த ஆட்சியில் நடந்த சம்பவங்களுக்கு இப்போது தான் விடை காண்கிறோம்.
எதற்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை விரும்புவர்கள் நாம் இல்லை. நமக்கு தமிழகத்தின் வளர்ச்சி மட்டும்தான் முக்கியம். கடந்த ஆட்சியில் நடந்த நிர்வாகக் கோளாறு காரணமாக மின்வெட்டு நிகழ்கிறது. வேண்டுமென்றே சிலரின் நடவடிக்கைகளால் மின்வெட்டு நடைபெறுகிறது. மின்வெட்டு நிலைமை விரைவில் நீக்கப்படும்.
இதையும் படிக்க : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி… முதல்வர் விஜய்யின் தனி செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்
பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தோம். தவெகவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பதையும் வெளிப்படையாக அறிவித்தோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை கொள்கையாக அறிவித்துதான் அரசியலுக்கே வந்தோம் கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்பதை வெளிப்படையாக அறிவித்தோம் என்று பேசினார். உரையை முடிக்கும்போது ஒரு ஆக்சன் செய்துகொள்கிறேன் ஒரு ஆக்சனுடன் தனது உரையை முடித்தார். அவரது செய்கை முன்னாள் மு.க.ஸ்டாலினை குறிவைப்பதாக உள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.