AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவை மாணவர் மரணம் – கோஷ்டி மோதலா? அமைச்சர் ராஜ்மோகனின் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு

சட்டமன்றததில் பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கோவையில் தனியார் கல்லூரி மாணவர் அமுதன் 20 பேரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கோரச் சம்பவத்திற்குத் தமிழக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கோவை மாணவர் மரணம் – கோஷ்டி மோதலா? அமைச்சர் ராஜ்மோகனின் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு
ராஜ்மோகன் - உதயநிதி ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Aug 2026 13:36 PM IST

சென்னை, ஆகஸ்ட் 12 : மத்திய அரசின் தொகுதி மறுவரையறை முடிவுக்கு எதிராக ஆகஸ்ட் 12, 2026 இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நீர்மானத்துக்கு திமுக ஆதரவளிப்பதாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது கோவையில் போதைப்பொருள் விற்பனை பற்றி போலீசில் தகவல் அளித்த மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் ராஜ்மோகனின் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு

அதற்கு விளக்கமளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சம்மந்தப்பட்ட மாணவர்கள் இடையே ஏற்கனவே இருந்த ‘கோஷ்டி மோதல்’ காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளது என்று தெரிவித்தார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டமன்றததில் பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கோவையில் தனியார் கல்லூரி மாணவர் அமுதன் 20 பேரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கோரச் சம்பவத்திற்குத் தமிழக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற கொடூர சம்பவங்கள் எங்கும் நடைபெறாமல் இருக்கத் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட மாணவன் அமுதன் குடும்பத்திற்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : விஐபி, விவிஐபிகளின் வருகைக்காக ஆண்டுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கோயம்புத்தூர் மாவட்டம் தனியார் கல்லூரியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக உருவான சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவரோடு பிற மாணவர்களுக்கு இருந்த கோஸ்டி மோதல் காரணமாக ஏற்பட்டது என அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே எதிர்ப்பு கிளம்பியது.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதன் என்பவர், கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். இதனையடுத்து அவரை சில மாணவர்கள் தாக்கியதாக கூறப்படும் நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அமுதன் உயிரிழந்தார். இது குறித்து அமுதனின் நண்பர் அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்

இச்சம்பவம் தொடர்பாக 5 கல்லூரி மாணவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் அடையாளம் கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 17 வயது மாணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

 

Follow Us