AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ICC T20 Ranking: முதல் 7 இடங்களில் 4 இடங்கள்.. ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்!

ICC T20 Batting Ranking: அபிஷேக் சர்மா உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக தொடர்ந்து நீடிக்கிறார். டி20 உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட இஷான் கிஷன் 2ம் இடத்தில் உள்ளார். பேட்டிங் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள அபிஷேக் மற்றும் இஷான் ஆகியோருக்கு இடையே வெறும் 4 ரேட்டிங் புள்ளிகளே வித்தியாசம் உள்ளது.

ICC T20 Ranking: முதல் 7 இடங்களில் 4 இடங்கள்.. ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்!
அபிஷேக் சர்மா - இஷான் கிஷன்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Jun 2026 17:30 PM IST

2 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடருக்காக இந்திய அணி (Indian Cricket Team) அயர்லாந்துக்குப் புறப்பட்டுள்ளது. இந்த 2 போட்டிகளும் வருகின்ற 2026 ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பெல்ஃபாஸ்டில் நடைபெறும். நடப்பு சாம்பியனான இந்தியா, தற்போது டி20ஐ தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. மேலும், டி20ஐ பேட்டிங் தரவரிசையைப் பார்த்தால், அதிலும் இந்தியர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களுக்கு முன்னதாக, ஐசிசி டி20 தரவரிசையில் (ICC Ranking) முதல் 7 பேட்ஸ்மேன்களில் இந்திய வீரர்கள் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அதன்படி, டி20 தரவரிசையில் முதல் 7 வீரர்களில் 4 பேர் இந்தியர்களே.

ALSO READ: டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து பவுலர் நம்பர் 1.. 36 ஆண்டுகால சாதனை முறியடிப்பு..!

அபிஷேக் ஷர்மா நம்பர் 1 பேட்ஸ்மேன்:

அபிஷேக் சர்மா உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக தொடர்ந்து நீடிக்கிறார். டி20 உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட இஷான் கிஷன் 2ம் இடத்தில் உள்ளார். பேட்டிங் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள அபிஷேக் மற்றும் இஷான் ஆகியோருக்கு இடையே வெறும் 4 ரேட்டிங் புள்ளிகளே வித்தியாசம் உள்ளது. 2ம் இடத்தில் உள்ள பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் உள்ளார்.

இந்த பட்டியலில் டி20 தரவரிசையில் முதல் 7 வீரர்களில் 4 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் முடிவடைந்த முத்தரப்புத் தொடரில் இந்தியா ‘ஏ’ அணிக்குத் தலைமை தாங்கிய திலக் வர்மா 6வது இடத்தில் உள்ளார். கேப்டன் பதவி பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அணியிலிருந்தும் நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், தற்போது 7வது இடத்தில் உள்ளார். இருப்பினும், சூர்யகுமார் யாதவின் பார்ம் அவுட் காரணமாக இந்திய டி20 அணியில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமின்றி, அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். வரும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக பதவியேற்பார்.

ALSO READ: வெறும் 3 வாய்ப்புகள்தான்.. ரோஹித்-விராட் உலகக் கோப்பையில் இடம் பிடிக்க பலப்பரீட்சை தொடக்கம்!

இந்த 4 வீரர்களைத் தவிர, வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் டி20 தரவரிசையின் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட சஞ்சு சாம்சன் தற்போது 21வது இடத்திலும், சிவம் துபே 27வது இடத்திலும் உள்ளனர். டி20 பந்துவீச்சாளர்களில், வருண் சக்ரவர்த்தி 2வது இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா 6வது இடத்திலும் உள்ளனர்.

Follow Us