AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி ஹேக்கர்கள் கவலை இல்லை…. வந்தாச்சு வாட்ஸ்அப்பில் புதிய வசதி

Anti-Scam Tools : ஆன்லைன் மோசடி மற்றும் சமூக வலைதளங்களை ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் தனது சமூக வலைதளங்களில் பாதுகாப்பை அதிகரிக்க புதிய ஆன்டி ஸ்கேம் பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி ஹேக்கர்கள் கவலை இல்லை….  வந்தாச்சு வாட்ஸ்அப்பில் புதிய வசதி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Mar 2026 18:04 PM IST

ஆன்லைன் மோசடி மற்றும் சமூக வலைதளங்களை ஹேக்கிங் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மெட்டா நிறுவனம் தனது சமூக வலைதளங்களில் பாதுகாப்பை அதிகரிக்க புதிய ஆன்டி ஸ்கேம் பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சங்கள் ஃபேஸ்புக், மெசெஞ்சர், மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பாதுகாப்பு வசதிகள் மூலம் பயனர்கள் ஆன்லைன் மோசடிகளை எளிதாக அடையாளம் காணமுடியும் என மெட்டா தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஆப்பிலேயே நமக்கு நோட்டிஃபிகேஷன் கிடைக்கும்.

ஹேக்கர்களிடம் இருந்து வாட்ஸ்அப்பில் புதிய பாதுகாப்பு வசதி

இந்த பாதுகாப்பு முயற்சியின் ஒரு பகுதியாக வாட்ஸ்அப்பில் டிவைஸ் லிங்கேஜ் வார்னிங் (Deveice linkage Warning) என்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக வாட்ஸ்அப்பில் உள்ள லிங்கட் டிவைஸ் வசதி மூலம் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை லேப்டாப் போன்ற பிற சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும். இதன் மூலம் மொபைல் போன் மட்டுமல்லாமல் பிற டிவைஸ்களிலும் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும்.

இதையும் படிக்க : விரைவில் அறிமுகமாகும் ஆப்பிள் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ்.. வெளியான முக்கிய அம்சங்கள்!

ஆனால் இந்த வசதிதயை சில ஹேக்கர்கள் தவறாக பயன்படுத்தி, பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்ய முயற்சிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனை தடுக்க மெட்டா நிறுவனம் புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி புதிய பாதுகாப்பு முறையின் படி யாராவது உங்கள் வாட்ஸ்அப் கணக்குகளை மற்றொரு டிவைஸ்களுடன் இணைக்க முயன்றால் உடனடியாக உங்களுக்கு வார்னிங் மெசேஜ் கிடைக்கும். அதில உங்கள் வாட்ஸ்அப் இணைப்பு தொடர்பான கோரிக்கையை கவனமாக பரிசீலிக்குமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

ஃபேஸ்புக்கிற்கும் புதிய பாதுகாப்பு வசதி

வாட்ஸ்அப் மட்டுமல்லாமல், மெசெஞ்சர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை மெட்டா அறிமுகப்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடிகளை கண்டறிதல் வசதி மெசேஞ்சரில் மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.

புதிய நபர்களுடன் நடக்கும் மெசேஜ்களில் மோசடி தொடர்பான செயல்பாடுகள் கண்டறியப்பட்டால, மெசேஞ்சர் பயனர்களுக்கு உடனடியாக எச்சரிக்கை செய்தி காட்டப்படும். இதன் மூலம் பயனர்கள் மோசடி முயற்சிகளை முன்கூட்டியே கண்காணித்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

இதையும் படிக்க : Gmail : ஜிமெயில் ஸ்டோரேஜ் கிளியர்.. இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!

இதற்கிடையில், மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் வாட்ஸ்அப்பில் 13 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்காக பெற்றோர்களால் நிர்ணயிக்கும் கணக்கையும் என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தங்களது குழந்தைகளுக்காக வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி, அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும்.

Follow Us