விரைவில் அறிமுகமாகும் ஆப்பிள் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ்.. வெளியான முக்கிய அம்சங்கள்!
Apple iPhone 18 Pro and Pro Max Smartphones | ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேஸ்க் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், அவற்றின் சிறப்பு அம்சங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் மக்கள் மத்தியில் ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன்கள் (iPhones) மிகவும் பிரபலமாக உள்ளன. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் கடைசியாக ஆப்பிள் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple 17 Series Smartphones) அறிமுகம் செய்த நிலையில், தற்போது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Apple 18 Series Smartphones) அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்து வெளியாகியுள்ள முக்கிய விவரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆப்பிள் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ஆப்பிள் நிறுவனம் அடுத்து ஆப்பிள் 18 ப்ரோ (Apple 18 Pro) மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் (Apple 18 Pro Max) ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் ஐடி கீழே கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முன்பக்கம் கொடுக்கப்படும் கேமரா அமைப்பிலும் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் கேமராவை மிகவும் தெளிவானதாகவும், அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவானதாகவும் மாற்றும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : டிவி ரிமோட்டில் உள்ள மஞ்சள், பச்சை, நீலம் பட்டன்கள் எதற்காக தெரியுமா? ஆச்சரிய தகவல்




இதுவரை அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களில் உள்ளதை போலவே இந்த ஸ்மார்ட்போன்களிலும் மூன்று கேமரா அம்சத்தை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்பக்கம் கொடுக்கப்படும் கிளாஸ் அம்சத்தை மாற்றி அலுமினியத்தில் கொடுக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமன்றி, ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன்களில் புதிய நிறங்களை அறிமுகம் செய்யவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. உதாரணமாம பர்பிள், பர்கண்டி, காஃபி பிரவுன் ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : போரின் தாக்கம் – எரிபொருள் மட்டுமல்ல… இண்டெர்நெட் சேவையும் பாதிக்கும் அபாயம் – என்ன காரணம்?
இந்த 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆப்பிள் புதிய சிப்செட் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 18 ப்ரோ மேக்ஸ் இதற்கு முன்பு அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களை விடவும் சற்று தடிமனான தோற்றத்தை கொண்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. காரணம் இந்த ஸ்மார்ட்போனில் 5,100 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.