AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

போரின் தாக்கம் – எரிபொருள் மட்டுமல்ல… இண்டெர்நெட் சேவையும் பாதிக்கும் அபாயம் – என்ன காரணம்?

Middle East Crisis : மேற்கு ஆசிய பகுதிகளில் அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிடையே உருவாகியுள்ள போர் சூழல் உலக அளவில் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் எரிபொருள் மட்டுமல்லாமல் இண்டர்நெட் சேவையும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

போரின் தாக்கம் – எரிபொருள் மட்டுமல்ல… இண்டெர்நெட் சேவையும் பாதிக்கும் அபாயம் – என்ன காரணம்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Mar 2026 17:01 PM IST

மேற்கு ஆசிய பகுதிகளில் அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிடையே உருவாகியுள்ள போர் சூழல் உலக அளவில் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறி வருகிறது. உலகின் முக்கிய எரிபொருள் வழித்தடமான ஹார்முஸ் நீர்வழி தற்போது மூடப்படுவதாக ஈரான் கூறப்படும் நிலையில் அது இந்தியாவுக்கு எரிபொருள் தடையை மட்டுமல்லாமல் இணைய சேவையையும் பாதிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. காரணம் இந்த ஹார்முஸ் நீர்வழி பாதை வழியாக இணையய தள டேட்டாக்களை செல்லும் கேபிள்களும் செல்கின்றன.

இணைய சேவைகளும் பாதிக்கும் அபாயம்

உலக அளவில் இணைய தள நெட்வொர்க்குகளில் 99 சதவிகிதம் கடல் வழியாக செல்லும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் வழியாகவே செல்கின்றன. இந்தியாவின் இண்டர்நெட் சேவைகளில் மூன்றில் ஒரு பங்கு பாரசீக வளைகுடா பகுதி வழியாகவே செல்கிறது. இதில் SEA-ME-WE 4 (SMW4), I-ME-WE மற்றும் FALCON போன்ற கேபிள் அமைப்புகள் இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, சென்னை ஆகியவர்றை ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுடன் இணைக்கின்றன.

இதையும் படிக்க : இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருதா? அமெரிக்கா சொன்ன ஹேப்பி நியூஸ்!

ஆனால் போர் சூழ்நிலை காரணமாக இந்த கேபிள்களுக்கு தேவையான பராமரிப்பு பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த 2025 ஆம் ஆண்டு ஜெத்தா அருகே கேபிள்களில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய கப்பல்கள் பணியில் இருந்த நிலையில், தற்போது ஏவுகணை தாக்குதல் மற்றும் டிரோன் தாக்குல் அச்சம் காரணமாக அந்த பணிகள் முற்றிலும் தடைபட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் இண்டர்நெட் கேபிள்கள் சேதமடைந்தால் அதனை உடனடியாக சரிசெய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

இது நீண்டகாலம் தொடர்ந்தால் இந்தியாவில் நேரடியாக ஐடி துறைகள் மற்றும் 270 பில்லியன் டாலர் மதிப்புள்ள டேட்டா சென்டர் துறையும் கடுமையாக பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஹார்முஸ் கடல் வழி பாதை என்பது இந்தியாவின் எரிசக்தி கொண்டு செல்லப்படும் முக்கிய பாதையாகும். இதில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 50 முதல் 55 சதவிகிதமும் எல்என்ஜி எனப்படும் திரவ இயற்கை எரியவாயு இறக்குமதியும் இந்த கடல் பாதை வழியாகவே கொண்டுவரப்படுகிறது.

இதையும் படிக்க : காமெனியின் மறைவு.. வெளியுறவுச் செயலாளர் ஈரான் தூதரை சந்தித்து இரங்கல் தெரிவிப்பு..

தற்போது போர் சூழல் தீவிரமடைந்த காரணத்தால் இந்த நீர் வழிபாதை வழியாக செல்லும் எண்ணெய் டாங்கர்களின் எண்ணிக்கை சுமார் 70 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. பல கப்பல்கள் தாக்குல் அபாயம் காரணமாக அந்தப் பகுதி வழியாக செல்ல முடியாமல் நங்கூரமிட்டு காத்திருக்கின்றன. குறிப்பாக திரவ எரிவாயு வழங்கும் முக்கிய நாடான கத்தாரில் இருந்து விநியோகம் பாதிக்கப்பட்டால் இந்தியாவில் மின்சாரம் போன்றவை பெரும் சிக்கலை சந்திக்கும்.

 

Follow Us