ஸ்டிக்கர் சஜஷன்.. இனி வாட்ஸ்அப்பில் டைப் பண்ணாலே ஸ்டிக்கர் வரும்.. ஐபோன் பயனர்களுக்கு அசத்தல் அம்சம்!
Get Sticker By Typing It In WhatsApp | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், எழுத்துக்களை ஸ்டிக்கராக மாற்றும் புதிய அம்சம் ஐபோன் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தனது பயனர்களுக்காக தொடர்ந்து பல்வேறு புதிய புதிய மற்றும் அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஐபோன் பயனர்களுக்கான புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, பயனர்கள் குறுஞ்செய்திகளை டைப் செய்யும்போது அது தொடர்பான ஸ்டிக்கர்கள் தோன்றும். அது வேண்டும் என்றால் பயனர்கள் பயன்படுத்தலாம். இந்த அம்சம் தான் தற்போது வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த அம்சத்தின் சிறப்புகள் என்ன, அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப்
உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. உடனடி தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல சேவைகளை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் செயலிக்கு ஏராளமான பயனர்கள் உள்ள நிலையில், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய பயனர்களை ஈர்க்கும் வகையிலும் வாட்ஸ்அப்பில் பல்வேறு அசத்தல் அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த வகையில், தற்போது இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இதுதான் டிஜிட்டல் வார்.. நாட்டையே திக்குமுக்காட செய்யும் சைபர் போர் என்றால் என்ன தெரியுமா?
வாட்ஸ்அப்பில் வந்த ஸ்டிக்கர் சஜஷன்
ஐபோன் பயனர்களுக்காக வாட்ஸ்அப் நிறுவனம் இந்த ஸ்டிக்கர் சஜஷன் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது குறுஞ்செய்தியை டைப் செய்யும் இடத்தில் அந்த வார்த்தைக்கு பொருத்தமான ஸ்டிக்கர் தோன்றும். அதனை கிளிக் செய்து அந்த சாட்டில் அனுப்ப முடியும். உதாரணமாக நீங்கள் சிரிப்பு என டைப் செய்கிறீர்கள் என்றால் சிரிப்பது தொடர்பான ஸ்டிக்கர்கள் ஸ்கிரீனில் தோன்றும். அதனை கிளிக் செய்து அந்த நபருக்கு அனுப்பலாம்.
இதையும் படிங்க : ஆண்ட்ராய்டு போனா, ஆப்பிள் போனா எது பாதுகாப்பு? சிக்கலில் யார்?
முன்பெல்லாம் வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர் அனுப்ப வேண்டும் என்றால் வேறு ஒரு செயலியை பயன்படுத்தி எடிட் செய்து பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த அம்சம் அமலுக்கு வந்துள்ளது.