AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

7,000 mAh பேட்டரி.. அசத்தல் அம்சங்கள்.. வெறும் ரூ.13,499-க்கு அறிமுகமான ரியல்மி சி83 5ஜி!

Realme C83 5G Smartphone Introduced In India | ரியல்மி நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

7,000 mAh பேட்டரி.. அசத்தல் அம்சங்கள்.. வெறும் ரூ.13,499-க்கு அறிமுகமான ரியல்மி சி83 5ஜி!
ரியல்மி சி83 5ஜி
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Mar 2026 12:42 PM IST

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது தான் ரியல்மி (Realme). காரணம், ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை ஏராளமான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக ரியல்மி நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போனை (Realme C83 5G Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி சி ஸ்மார்ட்போன்கள் வரிசையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி சமீபத்தில் அறிமுகம் செய்த தனது நார்சோ பவர் ஸ்மார்ட்போனில் 10,001 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன் தற்போது 7,000 mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இனி ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பலாம்.. வாட்ஸ்அப்பில் வரவுள்ள அசத்தல் அம்சம்!

ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மற்றும் 6nm பிராசசை கொண்டுள்ளது. இது 4ஜிபி மற்றும் 6ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 64 ஜிபி, 128 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது. 7,000 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 15 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் 5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இன்ஸ்டாகிராமை தொடர்ந்து யூடியூபிலும் பிரதமர் மோடி சாதனை.. 30 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டு அசத்தல்!

இத்தகைய அசத்தலான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெறும் ரூ.13,499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.13,499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.14,499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.17,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us