AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பலாம்.. வாட்ஸ்அப்பில் வரவுள்ள அசத்தல் அம்சம்!

Users Can Send Secret Messages In WhatsApp | வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், குறுஞ்செய்திகளை ரகசியமாக அனுப்பு அசத்தல் அம்சம் விரைவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக வாபீட்டா தெரிவித்துள்ளது.

இனி ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பலாம்.. வாட்ஸ்அப்பில் வரவுள்ள அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 03 Mar 2026 16:04 PM IST

உலக மக்கள் மத்தியில் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மிகவும் பிரபலமாக உள்ள நிலையில், அதில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது மேலும் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது குறுஞ்செய்திகளை ரகசியமாக அனுப்பும் அம்சம் தான். இது குறித்து, வாட்ஸ்அப் குறித்த அப்டேட்டுகளை வெளியிடும் வாபீட்டா இன்போ (WA Beta Info) தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மில்லியன்கள் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது “ஸ்பாய்லர்” என்ற அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டுகளை வெளியிடும் வாப்பீட்டா தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஒருவர் மற்றொருவருக்கு ரகசிய குறுஞ்செய்திகளை அனுப்ப இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஆக்டிவ் சிம் இல்லை என்றால் வாட்ஸ்அப் இயங்காது.. இன்று முதல் அதிரடி நடவடிக்கை!

ஸ்பாய்லர் அம்சம் எப்படி செயல்படும்?

வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு மட்டுமே தகவல் அனுப்பினாலும் அது அவரது சாட்டில் தான் இருக்கும். எனவே அதனை வேறு ஒருவர் பார்த்து விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. தாங்கள் குறுஞ்செய்தி அனுப்பும் நபரை தவிர வேறு யாரும் அந்த குறுஞ்செய்தியை பார்த்துவிட கூடாது அல்லது அந்த குறுஞ்செய்தி ஒருமுறை சாட்டில் இருந்தால் போதும் என நினைக்கும் நபர்களுக்கான அட்டகாசமான அம்சமாக தான் இது அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க : இனி வாட்ஸ்அப்பில் புரமோடட் சேனல்கள், ஸ்டேட்டஸில் விளம்பரங்கள் தோன்றும்.. மெட்டா முக்கிய அறிவிப்பு!

அதாவது இந்த அம்சத்தை பயன்படுத்தி குறுஞ்செய்தி அனுப்பும் பட்சத்தில் அந்த நபர் ஒருமுறை மட்டுமே அதனை பார்க்க முடியும். அதாவது இந்த குறுஞ்செய்தி அனுப்பும்போது எதுவும் தெரியாது. அதனை கிளிக் செய்யும் பட்சத்தில் குறுஞ்செய்தி தோன்றும். பிறகு அது மறைந்துவிடும். இந்த அம்சம் தனிநபர் உரையாடல்களுக்கு மட்டுமன்றி குழு உரையாடல்களுக்கும் வர உள்ளது. இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us