இனி வாட்ஸ்அப்பில் புரமோடட் சேனல்கள், ஸ்டேட்டஸில் விளம்பரங்கள் தோன்றும்.. மெட்டா முக்கிய அறிவிப்பு!
Meta New Announcement On WhatsApp | மெட்டா வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய அம்சத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மெட்டா (Meta) நிறுவனம், வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி வாட்ஸ்அப் சேலன்கள் (WhatsApp Channels) மற்றும் ஸ்டேட்டஸில் (Status) விளம்பரங்கள் தோன்றும் என்று மெட்டா கூறியுள்ளது. முன்னதாக இது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே இருந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் உள்ள அனைத்து பயனர்களின் வாட்ஸ்அப்பிலும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது.
உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் சிறந்த தகவல் பரிமாற்ற செயலியாக உள்ள நிலையில், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செயலியாக மாறியுள்ளது. வாட்ஸ்அப் செயலி இல்லை என்றால், பணி மற்றும் அன்றாட வாழ்க்கையை வாழ முடியாத அளவுக்கு சிலர் உள்ளனர். இவ்வாறு உலக அளவின் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வில் மிக முக்கிய செயலியாக வாட்ஸ்அப் மாறியுள்ள நிலையில், மெட்டா அதில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : குரோமா கோடைக்கால சேல்.. டிசி, ஏசி-க்கு அசத்தல் தள்ளுபடி.. உடனே செக் பண்ணுங்க!
சேனல்கள் மற்றும் ஸ்டேட்டசில் இனி விளம்பரங்கள்
Promoted Channels and ads in Status are available globally now, so you’ll likely start seeing them in the Updates tab if you haven’t yet.
These features help you find businesses and Channels to connect with right in WhatsApp. Your personal messages are end-to-end encrypted and…
— WhatsApp (@WhatsApp) February 26, 2026
இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது இனி புரமோட் செய்யப்பட்ட சேனல்கள் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் விளம்பரங்கள் தோன்றும் என்று கூறியுள்ளது. அப்டேட்ஸ் என்ற டேபில் இவை தோன்றும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதுவரை குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் இருந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் இந்த அம்சம் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்த 4 விஷயங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் சிக்கல்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
இந்த நிலையில் குறுஞ்செய்திகள் end-to-end encrypted அம்சத்தில் பாதுகாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.