AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குரோமா கோடைக்கால சேல்.. டிசி, ஏசி-க்கு அசத்தல் தள்ளுபடி.. உடனே செக் பண்ணுங்க!

Chroma Summer Sale 2026 | குரோமா நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான கோடைக்கால சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட் டிவிகள், ஏசிகளுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. என்ன என்ன பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குரோமா கோடைக்கால சேல்.. டிசி, ஏசி-க்கு அசத்தல் தள்ளுபடி.. உடனே செக் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Feb 2026 11:40 AM IST

குரோமா (Croma) நிறுவனம் தனது வருடாந்திர கோடைக்கால சிறப்பு சேலை (Annual Summer Sale) அறிவித்துள்ளது. டாடா (Tata) குழுமத்தின் இந்த நிறுவனம் வீட்டு உபயோக பொருட்களான ஸ்மார்ட் டிவி, ஏசி உள்ளிட்டவற்றுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில், குரோமாவின் கோடைக்கால சேலில் எந்த எந்த பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குரோமா கோடைக்கால சேல் – என்ன என்ன பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?

குரோமா நிறுவனத்தின் கோடைக்கால சேலில் அசத்தல் சலுகைகள் உடன் கூடிய பொருட்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாம்சங் 100 இன்ச் Neo QLED டிவி

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் 100 இன்ச் Neo QLED டிவி ரூ.3,84,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிவியின் அசல் விலை ரூ.13,36,600 ஆக உள்ள நிலையில் இந்த சேலில் சுமார் 71 சதவீத தள்ளுபடியுடன் வாங்கிக்கொள்ளலாம்.

டிசிஎல் 85 இன்ச் QLED டிவி

டிசிஎல் நிறுவனத்தின் டிசிஎல் 85 இன்ச் QLED டிவி சேலில் வெறும் ரூ.1,23,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிவியின் அசல் விலை ரூ.3,95,990 ஆக உள்ள நிலையில், சுமார் 69 சதவீதம் தள்ளுபடியுடன் இந்த சேலில் வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : உங்க வைஃபை பாஸ்வேர்டு யாருக்கும் தெரிய கூடாத.. இந்த விஷயங்களை டிரை பண்ணுங்க!

எல்.ஜி 86 இன்ச் நானோ டிவி

எல்.ஜி நிறுவனத்தின் எல்.ஜி 86 இன்ச் நானோ டிவி குரோமா சேலில் வெறும் ரூ.1,68,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிவியின் அசல் விலை ரூ.3,68,790 ஆக உள்ள நிலையில், குரோமா சேலில் 54 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.

55 இன்ச் சாம்சங் எல்இடி ஃபிரேம் டிவி

சாம்சங் நிறுவனத்தின் 55 இன்ச் சாம்சங் எல்இடி ஃபிரேம் டிவி இந்த சேலில் ரூ.64,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிவியின் அசல் விலை ரூ.1,09,600 ஆக உள்ள நிலையில், குரோமா சேலில் 40 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : மிக குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்கள்.. இந்தியாவில் அறிமுகமானது ரியம்லி பி4 லைட் 4ஜி!

Lloyd இன்வெர்ட்டர் ஏசி 1.25 டன்

Lloyd இன்வெர்ட்டர் ஏசி 1.25 டன் சேலில் ரூ.26,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏசியின் அசல் விலை ரூ.50,490 ஆக உள்ள நிலையில் குரோமா சேலில் 47 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.

எல்ஜி இன்வெர்ட்டர் ஏசி 1 டன்

எல்ஜி இன்வெர்ட்டர் ஏசி 1 டன் இந்த சேலில் ரூ.30,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏசியின் அசல் விலை ரூ.64,890 ஆக உள்ள நிலையில் இந்த குரோமா சேலில் 53 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.